Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டத்தை கலைத்தாடுகிறார் ஸ்டாலின்.. "4 ராஜாக்கள்"? பாஜகவுக்கு செக்? இனி தேசிய அளவில் முதல்வர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை எடுக்க போகிறாராம்.. இதுகுறித்த தகவல்கள் கசிந்துவருகின்றன.

கடந்த முறை சட்டமன்ற தேர்தல் போல அசால்ட்டாக விட்டுவிடாமல், இந்த முறை அனைத்து தொகுதிகளிலுமே வெற்றி பெற வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருந்து வருகிறார்.

When is the new Tamil Nadu cabinet reshuffled and Big Changes in DMK by MK Stalin soon say sources

பொறுப்பாளர்கள்: அதனால்தான், பிரச்சாரத்தின்போது, தேர்தல் பொறுப்பாளர்களிடமும், அனைத்து அமைச்சர்களையும், மா.செ.க்களையும் தொடர்புகொண்டு இறுதிக்கட்ட நிலவரத்தையும் விசாரித்திருக்கிறார்.

முக்கியமாக, பாஜகவின் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், கறுப்பு முருகானந்தம், ராமலிங்கம், சௌமியா அன்புமணி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் போட்டியிடும் தொகுதிகளான, கோவை, நீலகிரி, நெல்லை, தஞ்சை, நாமக்கல், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி ஆகிய தொகுதிகளின் கடைசிக்கட்ட நிலவரம் தற்போது எப்படி இருக்கிறது என அதிக நேரம் விசாரித்து கொண்டேயிருந்தாராம் ஸ்டாலின்.

எனினும், களப்பணியை சரியாக செய்யாமல், ஃபெர்மான்ஸ் குறைவாக இருந்த அமைச்சர்கள் குறித்து, உளவுத்துறையும், சபரீசனின் "பென்" அமைப்பும் முதல்வருக்கு ரிப்போர்ட்டை தந்திருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம், வெற்றி வாய்ப்போ, வித்தியாசமோ குறைந்தால் சீரியசாக நடவடிக்கை எடுப்பேன். மன்னித்து விட்டுவிடுவேனென்று மட்டும் நினைத்து விடாதீர்கள் " என்றாராம் ஸ்டாலின்.

உதயநிதி: இதே போன்ற ரகசிய ரிப்போர்ட் ஒன்று, உதயநிதிக்கும் சென்றிருந்ததாம்.. எனவே, தேர்தல் ரிசல்ட் வந்ததும் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் உதயநிதி வலியுறுத்தியிருக்கிறாராம்.

எனவே எப்படி பார்த்தாலும், கட்சியிலும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியா கூட்டணி: ஒருவேளை, லோக்சபா தேர்தல் முடிவில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனத்தை செலுத்துவாராம்.. அதாவது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவுக்கு ரெயில்வே இலாகாவும், கனிமொழி, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகாவும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒருவேளை மோடியே மறுபடியும் பிரதமராகிவிட்டால், ஜூன் முதல் வாரமே தமிழக அமைச்சரவையை, முதல்வர் மாற்றியமைத்து விடுவார் என்றும் சொல்வார்கள். இதில், 4 பேர் நீக்கப்பட்டு, 4 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக, சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளாராம்.

பரபரப்பு: சில மாவட்டங்களில் உட்கட்சி பூசல் உள்ளதால், அவைகளை சரிசெய்வதற்காக, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஜூன் 2-வது வாரம் இருக்கும் என்கிறார்கள்.. இதன்மூலம் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளதாம். எப்படியோ, தேர்தல் ரிசல்ட் வந்ததுமே, ஆட்சியிலும், கட்சியிலும் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

உதயநிதி ஸ்டாலின்: இங்கு இன்னொன்றையும், திமுக நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. அமைச்சர் உதயநிதிக்கு அடுத்தகட்டமாக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தொடர்ந்து எழும் நிலையில், லோக்சபா தேர்தல் முடிவை ஒட்டிய இந்த மாற்றத்துக்கான சரியான நேரம் என்று திமுக தலைமை கணித்துள்ளதாம்..

கட்சியில் நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், கூடுதல் மாவட்டங்களை உருவாக்க ஏற்கெனவே பட்டியலும் தயாராகியிருக்கிறதாம்.. சட்டப்பேரவை தேர்தலுக்கான களப்பணியில் இளைஞர்கள் அதிகளவில் வேண்டும் என்பதால், இளைஞரணி நிர்வாகிகள் பலருக்கு புதிய பொறுப்புகள் தரப்பட உள்ளதால், புதிய ரத்தம் திமுகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

இதில் இன்னொரு தகவலும் வட்டமடித்து வருகிறது.. தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வந்தால், பிரதமர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை பலமுறை, முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும், மீண்டும் இதே கருத்தை வலியுறுத்த வாய்ப்புள்ளதாம். எப்படிம் ஜுன் முதல் வாரத்துக்குள் சில முக்கிய நடவடிக்கை திமுகவில் இருக்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+