கச்சத்தீவு.. அவதூறு பரப்பும் மோடி அருணாச்சலில் சீனா ஊடுருவல் பற்றி வாய் திறப்பாரா? கனிமொழி அட்டாக்!
சென்னை: கச்சத்தீவு பிரச்சனையில் தமிழ்நாட்டின் வாக்குகளுக்காக அவதூறு பரப்புகிற பிரதமர் மோடி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீனா ஊடுருவியிருப்பது பற்றி வாய் திறப்பாரா என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில் திடீரென கச்சத்தீவு பிரச்சனையை 'தேசிய' பிரச்சனையாக்கி இருக்கிறது பாஜக. 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாக கூறி பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அடுத்தடுத்து கச்சத்தீவு குறித்து பேசி வருகின்றனர்.

கச்சத்தீவு பிரச்சனையை பாஜக கையில் எடுத்திருப்பதற்கு காங்கிரஸ், திமுக தரப்பு பதிலடி தந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? 3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... என கேள்வி எழுப்பி இருந்தார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி எம்பி தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ளதாவது: அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பாஜக அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைத்துவிட்டதா பாஜக? தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்? . இவ்வாறு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications