தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
சென்னை: தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று முடிவு செய்யவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக மட்டும் வகுப்புகள் நடைபெற்றன.
அதேநேரம், நோய் பரவல் குறைந்ததால், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பு
இருப்பினும் ஆங்காங்கு பள்ளிகளில் கொரோனா பரவுவதாக செய்திகள் பதிவாகியுள்ளன. அதுபோன்ற பள்ளிகள் 1 வாரம் மூடப்படுகின்றன. சானிடைசர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த அனுபவத்தை வைத்து, அடுத்ததாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க தமிழக கல்வித் துறை திட்டம் வைத்துள்ளது.

கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை
இதையொட்டி, பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகளை திறந்தால் ஏர்படும் சவால்கள் குறித்து அப்போது ஆய்வு மேற்கொண்டது.

சுழற்சி முறையில் பள்ளிகள்
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்கலாமா, அல்லது 1ம் வகுப்பிலிருந்தே திறக்கலாமா என்பது பற்றி விரிவாக இன்று ஆலோசனை நடத்தியுள்ளோம். பள்ளிக் கல்வித் துறை சார்பாக நாளை, முதல்வரிடம் விரிவான அறிக்கை வழங்க உள்ளோம்.

முடிவு இல்லை
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில்தான் நடத்தப்படும்.

எங்கு அதிக மாணவர் வருகை தெரியுமா?
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு இதுவரை 83 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் நோய் பரவவில்லை. பள்ளிகள் திறப்புக்கு பிறகு, கன்னியாகுமரி மாவட்டத்தில், அதிக வருகைப் பதிவேடு பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் குறைவான வருகை பதிவேடு பதிவாகியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்தேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications