"ரகசிய டைரி".. சிக்கும் புள்ளிகள்?.. விசாரணைக்கு சிபிஐ அனுமதி தந்தே ஆகணும்.. அமைச்சர் ரகுபதி அதிரடி
விஜயபாஸ்கர் மீதான விசாரணை எப்போது என்பது குறித்து ரகுபதி பதில் தந்துள்ளார்
சென்னை: விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை விரைவில் திமுக தரப்பு எடுக்கும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பொதுவாக முந்தைய ஆட்சி கால ஊழலை, ஆளும் தரப்பு விமர்சிப்பதும், அது தொடர்பான நடவடிக்கையை எடுப்பதும் வழக்கம்.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே ஊழல் விவகாரத்தில் சிக்கிய அதிர்ச்சியை தந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

முடக்கம்
கடந்த 2016ம் ஆண்டில் சென்னையில் செங்குன்றம் அருகே இருந்த குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் தொடர்ந்தது... மேலும் 246 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களும் முடக்கப்பட்டன.. மூன்று அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது...

விஜயபாஸ்கர்
இந்நிலையில் மாநில அரசிடம் அனுமதி பெற்றே வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் இந்த விவகாரத்தில், விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் ரமணா , ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் டி.ராஜேந்திரன் ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி இருக்கிறது.

மாஜிக்கள்
எனவே, இதற்கு அனுமதி கிடைக்குமா? அப்படி அனுமதி தந்தால் உடனடியாக விசாரணை நடத்தப்படுமா? என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் எகிறி வரும் நிலையில், அதுகுறித்து அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில் இது குறித்து செய்தியாளர்கள், திமுக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ அனுமதி கோரினால் தமிழக அரசு அனுமதி தந்து தான் ஆக வேண்டும்...

நிரூபணம்
இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொன்னார்கள். ஆனால் வருமானவரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடவில்லை என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.. எனவே, பழிவாங்கும் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என்பது அவர்களுக்கும் புரிந்து இருக்கும்" என்றார்.
Recommended Video

ரகசிய டைரி
அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளதையடுத்து, விஜயபாஸ்கருக்கு கடும் சிக்கல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ரெயிடின்போது ஒரு ரகசிய டைரி சிக்கியிருந்த நிலையில், அந்த டைரி பற்றின விஷயங்களை டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.. ஆனால், அதிமுக ஆட்சி என்பதால், டைரி மீது மட்டுமல்லாமல், இந்த வழக்கின் விசாரணையே மந்தமாக போய்விட்டது.. ஒருவேளை, இந்த முறை விசாரணைக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், அந்த ரகசிய டைரி பற்றியும் அதிகாரிகள் தோண்டி எடுப்பார்களா தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications