"சபாஷ் ஸ்டாலின்".. ஞாபகமிருக்கா டாக்டர் ஐயா சொன்னது? உல்டாவா போச்சே.. கோர்ட்டுக்கு போறார் பாமக பாலு
சென்னை: திமுக அரசுக்கு எதிராக பாமக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.. அத்துடன், கோர்ட்டுக்கு போக போவதாகவும் கூறியுள்ளது, மிகுந்த பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் வெளியானது.

அதாவது, 24 மணி நேரம் டாஸ்மாக், பார் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மது வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மாநாட்டு மையங்கள், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பணம் கட்டி சிறப்பு உரிமம் பெற்று மது விருந்து நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
ராமதாஸ்: இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இதில் முதல்நபராக கண்டனம் பதிவு செய்தது, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான்.. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாகவே, அதிமுக, திமுக ஆட்சிகளின்போது கோரிக்கை வைத்து வருகிறது பாமக..அதுமட்டுமல்லாமல், படிப்படியாக மதுக்கடைகளை மூடுங்கள் என்று வலியுறுத்தியும் வருகிறது..
இந்த நேரத்தில் ஒரு நிகழ்வை, நாம் இங்கே நினைவுகூர்ந்து சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. கடந்த வருடம், முதல்வராக பொறுப்பேற்று, பல்வேறு அதிரடிகளை ஸ்டாலின் செய்து கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில், டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது குறித்த வழக்கமான அறிக்கைதான் அது.. முதல்வராக பதவியேற்றிருந்த ஸ்டாலினின் கவனத்துக்கு இந்த அறிக்கை சென்றது... அறிக்கையை படித்து பார்த்தார் ஸ்டாலின்..
மதுக்கடைகள்: மதுக்கடைகள் இல்லாமலும், அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்பது முதல் சில புள்ளி விவரங்களை டாக்டர் ஐயா, அதில் விலாவரியாக தெரிவித்திருந்தார்.. அரசுக்கு வருமானம் தரக்கூடிய சில டிப்ஸ்களையும் வழங்கியிருந்தார்.. இதையடுத்து, துரைமுருகனிடம் இந்த அறிக்கை பற்றி விவாதித்திருக்கிறார் ஸ்டாலின்.. பிறகு துரைமுருகனே ராமதாஸுக்கு போனை போட்டு பேசியுள்ளார்.. துரைமுருகனும், ராமதாஸும் நல்ல நண்பர்கள் என்பதாலும், அவர்களுக்குள் ஒரு இணக்கமான போக்கு எப்போதுமே இருப்பதாலும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துள்ளனர்..

பிறகு துரைமுருகனிடமிருந்து போனை வாங்கி, முதல்வர் ஸ்டாலினும் ராமதாஸிடம் பேசியுள்ளார். "அய்யா.. அறிக்கையை படிச்சேன்.. நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. மதுக்கடைகளை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையும்.." என்று ஸ்டாலின் சொல்ல, அதற்கு ராமதாஸோ, "கடந்த வருடம் லாக்டவுன் சமயத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி கேட்டிருந்தேன்... இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம்... மூடினது மூடின மாதிரியே இருக்கட்டுமே" என்று இன்னொரு கோரிக்கையை வைத்தாராம் ராமதாஸ்.
நன்றி ஐயா: இதற்கு ஸ்டாலின்.. "நன்றி ஐயா.. தொடர்ந்து இதுபோன்ற ஆலோசனைகளை கொடுங்க.. முடிஞ்சவரைக்கும் செயல்படுத்துறோம்" என்று தெரிவித்திருக்கிறார். பாமகவின் தலைமை நிலையம், ஒரு செய்திக்குறிப்பாகவே அப்போது வெளியிட்டிருந்தது.. ஸ்டாலின் பேசிய விஷயத்தையும் அதில் விரிவாகவே பதிவிட்டிருந்தது..
மதுவிலக்கு: இவர்கள் 2 பேரும் பேசியதை பார்த்தால், எப்படியும் மதுவிலக்கு தமிழகத்துக்கு வந்துவிடும் என்றே பரவலாக அப்போது கருதப்பட்டது.. ஆனால், இன்று எல்லாமே தலைகீழாகிவிட்டது.. அதனால்தானோ என்னவோ, முதல்நபராக இன்று திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.. 'திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்ப பெறாவிட்டால், அந்த அரசாணை திரும்ப பெறப்படும் வரை மக்களை திரட்டி மிகக்கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பாமக முன்னெடுக்கும்' என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஒருபடிமேலேபோய், இதனை எதிர்த்து பாமக சார்பில் ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்போவதாக பாமக வழக்கறிஞர் பாலு அறிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு பிரபல பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ள நிலையில், அரசு தரப்பில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதுவுக்கு பூரண தடை விதிக்க வேண்டும் என பாமக நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
அரங்குகள்: இந்த நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றில் மதுபானம் வழங்குவதற்கான சிறப்பு உரிமம் பெற அனுமதிக்கும் சமீபத்திய அறிவிப்பு சவாலானது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆன்லைன் முறையில் இதுபோன்ற சிறப்பு உரிமங்களை எளிதாகப் பெறுவதற்கும், பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் ஆண்டுக் கட்டணம் செலுத்தி மதுபானங்களை வழங்குவதற்கும் அனுமதிக்கும் இத்தகைய அறிவிப்பை அரசு தரப்பில் கொண்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, என்எல்சி விவகாரத்தில் பாமக கொந்தளித்து போய் உள்ளது.. அடுத்ததாக, வன்னியர் விவகாரத்திலும், திமுக அரசுக்கு கெடு வைத்துவிட்டு, காத்திருக்கிறது.. இப்போது, அடுத்த பிரச்சனை கிளம்பி உள்ளது.. மதுவுக்கு எதிராக பாமக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வரும்நிலையில், இப்படி ஒரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது, பாமக கூடாரத்தையே டென்ஷன் ஆக்கியுள்ளது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications