Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கமலாலய" வாசலில் கேட்கும் பொருமல்கள்.. என்னாது "அவர்"தான் தலைவரா? சாய்ஸ் + சான்ஸ் இதுதான்.. ஹாட் பாஜக

பாஜகவின் அடுத்த தலைவர் சாய்ஸில் பொன்.ராதாகிருஷ்ணன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைமை அதிருப்திகள் கூடிவரும் நிலையில், கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்கிற குழப்பங்கள் தினம் தினம் வட்டமடித்தபடியே வருகிறது.. இதனால் மாநில தலைமை மாற்றப்படுமா? என்கிற அனுமானங்களும், யூகங்களும் கிளம்பி உள்ளன.

தமிழக பாஜகவிலும் உட்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது.. குறிப்பாக மாநில தலைமை மீது, அக்கட்சியின் சில சீனியர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக கடந்த ஒரு வருட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தங்களை "சீனில்" வராமல் கவனமாக பார்த்து கொள்வதாகவும், தன்னை மட்டுமே மீடியாக்களில் ஃபோகஸ் செய்கிறார் என்றும் பல்வேறு பொருமல்களுடன் புகார்கள் டெல்லி பறந்தன.

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

ஆனால், எந்தவிதமான புகாரையும் மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.. இந்த சமயத்தில்தான் இடைத்தேர்தல் விவகாரம் தலைதூக்கியது. அண்ணாமலை நினைத்திருந்தால், டிடிவி + ஓபிஎஸ் + வாசன் + பாரிவேந்தர் + கிருஷ்ணசாமி + ஏசி சண்முகம், + ஜான்பாண்டியன், பூவைமூர்த்தி, சசிகலா இப்படி பலரையும் இணைத்து என்றோ இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்.. இத்தனை பேர் தங்களுக்கு ஆதரவாக இருந்தும்கூட, போட்டியிடாமல் ஒதுங்க காரணம், எடப்பாடி பழனிசாமி மீது, மாநில தலைமைக்கு இருக்கும் "பாசம்"தான் என்று, மீண்டும் அண்ணாமலை மீது டெல்லிவரை புகார் வாசிக்கப்பட்டதாம். ஆனால், இதையும் மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.

 இரட்டை தலைமை

இரட்டை தலைமை

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஓபிஎஸ்ஸும், பாஜக மாநில தலைமை மீதான புகாரை, டெல்லிக்கு கொண்டு சென்றாராம்.. அதையும் பாஜக மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.. அவ்வளவு ஏன், சில மாதங்களுக்கு முன்பு, "இரட்டை தலைமை" விவகாரத்தில் எடப்பாடியை சமாதானப்படுத்த டெல்லியில் இருந்து 2 சீனியர்கள் கிளம்பி வந்து சேலத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.. அப்போது அவர்களிடம், "பாஜக மாநில தலைமையை முதலில் மாற்றுங்கள்" என்று எடப்பாடி சொன்னாராம்.. இதையும் பாஜக மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவுக்குள்ளிருந்து அதிருப்தியாளர்கள் வெளிவர துவங்கினர்.

 மாறும் தலைமை

மாறும் தலைமை

இதற்கு காரணம், மூத்த தலைவர்கள் நாராயணன் திருப்பதி, வெங்கடேசன், கோவர்த்தன், குஷ்பு போன்ற பாஜக நிர்வாகிகள் சிலருக்கு, சமீபத்தில் மத்திய அரசு பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்ட நிலையில், தனக்கு எந்த பதவியும் கிடைக்காத அதிருப்தியில் தான், நிர்மல்குமார் அதிமுகவுக்கு தாவிவிட்டதாக காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு முன்பு எத்தனையோ பேர் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கும், பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும் தாவியிருக்கிறார்கள் என்றாலும், யாருமே இப்படி தலைமை மீது சேற்றை வாரி பூசிவிட்டு போகவில்லை.. மிக இழிவான வார்த்தைகளையும் அண்ணாமலை மீது உதிர்த்திருந்த நிலையில், இந்த அதிருப்திகள் பாஜகவுக்குள் இனியும் தொடரும் என்றும் செய்திகள் கசிந்து வருகின்றன.

 கவலை அறிக்கை

கவலை அறிக்கை

சொந்த கட்சிக்குள் எவ்வளவுதான் பூசல்கள் இருந்தாலும், வரும் எம்பி தேர்தலுக்கு "ஒருங்கிணைந்த அதிமுக" அவசியம் தேவை என்பதை பாஜகவில் உள்ள சீனியர்களே நன்றாக உணர்ந்துள்ளார்களாம்.. அதனால்தான், அதிமுக விவகாரத்தை மிக பொறுமையாக இந்த விஷயத்தை கையாண்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.. அதிமுகவுடன் அண்ணாமலையின் மோதல் போக்கையும், தமிழக பாஜக தலைகள் பலரும் அவ்வளவாய் ரசிக்கவில்லையாம்.. அதிமுக தயவில்லாமல் தமிழகத்தில் தாமரை மலரவே முடியாது என்பதை தீர்க்கமாக உணர்ந்திருக்கும் அந்த சீனியர்கள், மறுபடியும் இது விஷயமாக டெல்லி வரைக்கும் கவலை அறிக்கையை வாசித்திருக்கிறார்களாம்.

 பிரஷர் பிரஷர்

பிரஷர் பிரஷர்

அதுமட்டுமல்ல பாஜக தேசிய தலைவர் நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது, அண்ணாமலை விஷயமாக அவரிடம் சில சீனியர்கள் பேசியதாகவும் கொங்கு மண்டல தகவல்கள் கூறுகின்றன.. அதனால், பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றியே தீரவேண்டும் என்று 80 சதவீதத்துக்கும் அதிகமான சீனியர்கள் டெல்லி தலைமைக்கு பிரஷர் தந்து வருகிறார்களாம்..அதேபோல, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு எதிராகவும் புகார்கள் சொல்லப்பட்டுள்ளதாம்.. தமிழக பாஜக தலைவர்கள் சிலரது ஆடியோ, வீடியோ விவகாரங்கள் அண்ணாமலையின் கையில் சிக்கி இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

பொன்னார்

பொன்னார்

அதனால்தான், மாநில தலைமையை மாற்ற வேண்டும் என்று மறுபடியும் கோரிக்கைகளை விடுக்க துவங்கி உள்ளனராம்.. அண்ணாமலைக்குப் பதிலாக வேறு யாரை தலைவராக்கலாம் என்ற பரிசீலனை லிஸ்ட்டில், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயர் முதலாவதாக இருப்பதாக தெரிகிறது.. இப்படி எத்தனையோ உறுதிப்படுத்தப்படாத சமாச்சாரங்கள், அனுமானங்கள், பாஜகவுக்குள் ஓடினாலும், அண்ணாமலையை மேலிடம் மாற்ற வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.. காரணம், அண்ணாமலை மீது டெல்லி தலைவர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், நன்மதிப்பும்தானாம்.

 பெஸ்ட் சாய்ஸ்

பெஸ்ட் சாய்ஸ்

அதுமட்டுமல்ல, மாநில தலைமையை மாற்றினால், இதுவரை வைக்கப்பட்டு வந்த அத்தனை குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடக்கூடும்.. மேலும், எம்பி தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடமே உள்ளதால், புதிய தலைவரை இந்த சமயத்தில் நியமிக்க முடியாது.. அப்படியே நியமித்தாலும், புதிய தலைமையுடன் சேர்ந்து, குறுகிய காலத்தில், தேர்தலை எதிர்கொள்வது என்பது சிரமமாகிவிடும்.. அதனால், மாநில தலைவர் அண்ணாமலையின் கரங்களை, கட்சிக்குள் இருக்கும் அத்தனை பேரும் சேர்ந்து வலுப்படுத்துவதுதான், தற்போது தமிழக பாஜகவுக்கு இருக்கும் "ஒரே சாய்ஸ்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..!!

சுழலும் அச்சாணி

சுழலும் அச்சாணி

மாநில தலைமைக்கு ஒத்துழைப்பு தருவதுடன், களப்பணியில் இறங்கி தீவிரம் காட்டினால் மட்டுமே, வரப்போகும் தேர்தலை பாஜகவால் சமாளிக்க முடியும் என்கிறார்கள்.. அதேபோல, ஓபிஎஸ் தரப்புக்கு, மேலிட பாஜகவில் இருந்து பாசிட்டிவ் மெசேஜ் வந்துள்ளதாம்.. மேலும், பாஜக மாநில தலைமையை மட்டும் சற்று அனுசரித்து செல்லும்படியும், மேலிட தலைவர்கள் கேட்டுக் கொண்டார்களாம். அதனாலேயே அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ், சொந்த செல்வாக்கை வலுப்படுத்தும் அடுத்தடுத்த வியூகங்களில் தெம்பாக இறங்கி வருவதுடன், தமிழக பாஜக குறித்து எந்தவிதமான விமர்சனத்தையும் முன்வைக்காமல் உள்ளாராம்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+