பூனைக்கு மணி கட்டிய "செல்வம்".. அதைவிடுங்க.. ஓவரா கிளம்பிட்டாங்களே.. எடப்பாடி ப்ளானை நொறுக்குமா பாஜக?
பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அசைன்மெட் தரப்பட்டுள்ளதாம்
சென்னை: பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு, அதிமுக தரப்பு குறி வைத்து வரும்நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறதோ? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது..!!!!
தமிழக பாஜகதலைவர் அண்ணாமலையின் அரசியல், அதிமுக மேலிடத்துக்கு கடுப்பையும், எரிச்சலையும் தந்து வருவதாக தெரிகிறது.. இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில் ஓபிஎஸ் + எடப்பாடி என இரு தரப்பையுமே அன்று சந்தித்து பேசியிருந்தார் அண்ணாமலை.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதுமே "ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது என்று அதிரடியாக பேட்டி தந்தது, எடப்பாடி டீமுக்கு மேலும் கொதிப்பை தந்துவிட்டதாம்..

பவர்ஃபுல் லேடி
அதனால்தான், தங்களை தேடி வந்த பாஜக அதிருப்தியாளர்களை மனமுவந்து அதிமுக ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள்.. இதை பார்த்து எரிச்சலடைந்த அண்ணாமலை, அன்றைய தினமே சூட்டோடு சூடாக ஓபிஎஸ்ஸை தேனியில் தேடிப்போய் சந்தித்த காரணமும் இதனால்தானாம். ஓபிஎஸ்ஸூக்கு ஆறுதல் சொன்னதோடு நிற்காமல், "ஓபிஎஸ் மீண்டும் வருவார் - மீண்டு வருவார்" என்று பஞ்ச் பேசி, மேலும் டென்ஷனை ஏற்றவும், எடப்பாடி டீம் தகிக்க துவங்கிவிட்டது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயலலிதாவைவிட என்னுடைய தாயார் 100 மடங்கும், எனது மனைவி 1000 மடங்கும் பவர்புல் லேடி என்று அண்ணாமலை சொல்லவும், கோபத்தின் உச்சிக்கே போய்விட்டதாம் எடப்பாடி டீம்..

B ப்ளான்
இதற்கு பிறகே, போஸ்டர் கிழிப்பு, உருவ படம் எரிப்பு என இரு தரப்பிலுமே பதிலடிகள் ஆரம்பமாகி விட்டன.. எனவே, அதிமுக தலைவர்களே சமாதானம் ஆனாலும் தொண்டர்களை சமாதானம் செய்வது கஷ்டம் என்கிறார்கள்.. ஜெயலலிதாவையே சீண்டிவிட்டதால், தொண்டர்கள் தேர்தல் சமயத்தில் இறங்கி வேலைபார்ப்பார்களா? கூட்டணி உறவை அண்ணாமலையின் பேச்சு நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள்.. எம்பி தேர்தல் என்ற ஒரு விஷயத்துக்காக மட்டுமே அதிமுகவை தமிழக பாஜக பொறுத்து கொண்டு சென்றாலும், இந்த விரிசலும், உரசலும் மேலும் அதிகமானால், நிச்சயம் அதிமுகவுக்கு நிகரான பி பிளான் ஒன்றையும் பாஜக, கையில் எடுக்கவும் தயங்காது என்கிறார்கள்.

உச்சஸ்தானம்
அதுமட்டுமல்ல, அண்ணாமலை அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "சில முடிவுகள் சிலபேருக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.. அம்மா எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்றுதான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்தத் தலைவர்களைப் போல கட்சியின் நன்மைக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம்கூட பயமில்லாமல் எடுப்பேன்" என்று சொல்லியிருந்தார்.. அதாவது, அதிமுக தலைமைக்கு இணையாக தன்னை முன்னிலைப்படுத்துவதை அதிமுக விரும்பவில்லை.... அதனால்தான், அண்ணாமலை தமிழக பாஜகவுக்குத்தான் தலைவரே தவிர, டெல்லி தலைமைக்கு அல்ல என்று அதிமுக பதிலடி தந்தது.

கங்கா தேவி
எனினும், பாஜக தலைமைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகையில் சில வியூகங்களை எடப்பாடி டீம் மேற்கொண்டுள்ள வருகிறதாம்.. அதில் ஒருபகுதியாகத்தான், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் நேற்றைய தினமும் மகளிர் அணியினர் இணைந்துள்ளனர்.. செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்கா தேவி ஏற்கனவே அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்தவர். அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததுமே அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது... அத்துடன், உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இடியாப்ப சிக்கல்
இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது பதவி வழங்குவதில் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.. இதனால், மகளிர் அணி தரப்பில் அதிருப்தியில் இருந்ததாகவும் தெரிகிறது.. இதைதான் எடப்பாடி தரப்பு மோப்பம் பிடித்துவிட்டதாம்.. இதை வைத்தே, அதிமுகவிலும் நேற்றைய தினம் இணைத்து கொண்டுள்ளதாக தெரிகிறது.. இதனிடையே, இத்தனை அதிருப்திகளும், சமீபகாலமாகவே பாஜகவில் திடீரென வெடித்து கிளம்ப என்ன காரணம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது..

கோட்டை ஓட்டை
அதாவது, ஏற்கனவே பாஜக தலைவராக, மத்திய அமைச்சர் எல்.முருகன் பொறுப்பில் இருந்தார் இல்லையா? அப்போது, மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருந்தவர்களை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் வேகமாக தொடங்கின.. முருகன் தலைமை பொறுப்பில் இருந்தசமயத்தில்தான், பாஜகவுக்குள் பல புதுமுகங்கள் வந்து சேர்ந்தன.. இந்த இணைப்புகளின்போது, கட்சி பதவி உள்பட பல்வேறு உத்தரவாதங்கள் அவர்களிடம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது போல் யாரையுமே திருப்திப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதும், இந்த விலகல்களுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.. இதில் முதல் மணியை அடித்தது, ஆயிரம் விளக்கில் திமுக எம்எல்ஏவாக இருந்த கு.க. செல்வம் ஆவார்..

கு க செல்வம்
திமுக மீது கோபித்து கொண்டு, வேக வேகமாக பாஜகவுக்கு சென்ற நிலையில், அதே வேகத்துடன், மறுபடியும் திமுகவுக்கே வந்துவிட்டார்.. "பதவி கேட்டேன்.. கொடுக்கவில்லை. போய் விட்டேன்" என்று ஓபனாகவே காரணமும் சொன்னார். ஆனால், பாஜகவில் குக செல்வத்துக்கு வாய்ப்பு தந்திருந்தால், நிச்சயம் ஆயிரம் விளக்கை மறுபடியும் தன் பிடியில் வைத்திருந்திருப்பார். ஆனால், சம்பந்தமே இல்லாமல் குஷ்புவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுவிட்டதே என்ற பொருமல்கள் எழுந்தபோதே, குக செல்வம் சற்று அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதற்கு பிறகு, பல மாத காலமும் விரக்தியில் இருந்த செல்வம், மீண்டும் திமுகவில் வந்து இணைந்துவிட்டார்..

ட்ரெயினிங்
அப்போது முதல், சில அதிருப்தியாளர்கள் பாஜகவுக்குள்ளேயே வட்டமடித்து வந்ததாகவும், இப்போது, அதுதான் விஸ்வரூபமெடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.. ஒருவேளை, மூத்த தலைவர் கு.க. செல்வம் திமுக பக்கம் மறுபடியும் சென்றபோதே, பாஜக இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், அதிமுக பக்கம் இன்று அதிருப்தியாளர்கள் செல்ல வாய்ப்பிருந்திருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதுபற்றி பாஜக தரப்பில் சொல்லும்போது, "மற்ற கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. பாஜக ஜனதா மாறுபட்டது.. இதன் சித்தாந்தம், கொள்கைகள், செயல்பாடுகள் மாறுபட்டது... அதனால், புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமான ஒன்று.. எந்த பொறுப்பும் இல்லாமல், பல வருடங்களாக கட்சியில் பலர் இருப்பதற்கு அதுவே காரணம்" என்கிறார்கள்...!!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications