சென்னை மெட்ரோ 2.0.. முதல் ரயில் எப்போது.. எங்கு இயக்கப்படும் தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு
சென்னை: 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் முதல் பகுதி செயல்பாட்டிற்கு வரும். இதன்படி லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான நடைபாதை பொதுமக்களுக்கு திறக்கப்படும். குறிப்பாக சென்னையின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டாம் கட்ட திட்டத்தில் முழுமையாக செயல்படும் முதல் ரூட் இதுவாகும். 61,843 கோடி செலவில் 116 கிமீ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (வழிச்சாலை 4), மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (வழிச்சாலை 5) ஆகிய மூன்று வழித்தடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அதிக நேரம் எடுக்கும் என்பதால், ஆரம்பக் கட்டங்களில், முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான திருமயிலையில் ரயில்கள் நிறுத்தப்படாது. என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .

அடையாறு மெட்ரோ; மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம்) பாதி பணிகளை முடித்துள்ளது. ஆற்றின் நடுப்பகுதி வரை இந்த சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது.
காவிரி என்ற இந்த பெயர் கொண்ட இயந்திரம் விரைவில் முழுமையாக சுரங்கம் தோண்டி முடிக்கும். இயந்திரம் மார்ச் மாதத்தில் சேத்பேட் ஏரிக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 இன் 3-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ்முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்துஅடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.
இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்துதற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.
சென்னை மெட்ரோ: இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னைமெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்த்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரைமெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில்இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 87 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.8 லட்சத்தை தாண்டி உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications