Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புயலு..ங்க" கமலாலயத்தில்.. 9 சீட்டாமே.. முருகா + நாராயணா.. இது வேற லெவல்.. சுவற்றில் மலர்ந்த "தாமரை"

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய தலைவர்களுடன் அதிமுக தரப்பு நெருங்கி வரும்நிலையில், தமிழக பாஜகவின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரியவில்லை.. ஆனால், அண்ணாமலை வியூகம் ஒருபக்கமும், எல்.முருகனின் வியூகம் மறுபக்கமும் என தகித்து கிடக்கிறது கமலாலயம்..!!

அதிமுக - பாஜக கூட்டணி இடையே சலசலப்புகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிலும், இரு கட்சி தலைமைகளிடம் அதிருப்திகள் நிலவுவதாக தெரிகிறது.

When will the discontent between Edappadi palanisamy and Annamalai end and What are L Murugan strategies

அதனால்தான், அதிமுகவுடனான கூட்டணி தேவையற்றது... தமிழகத்தில் நாம் வளர வேண்டுமெனில் பாஜக தனித்து நிற்க வேண்டுமென சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்..

வீக் பாயிண்ட்ஸ்: அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார்.. இதையடுத்து, டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை.. ஆனால், அவரது கருத்தை டெல்லி மேலிடம் ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாமலையை சமாதானப்படுத்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு பேட்டியில், "தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்" என்று கூறியிருந்தார்..

கன்பார்ம் எடப்பாடி: சட்டசபை வளாகத்தில், செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து அமித்ஷா இவ்வாறு சொல்லியுள்ளாரே? என்று கேட்டதற்கு, இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிசெய்திருந்தார்.. ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் இதில் மாறுபட்டே வருகிறார்.. அவரது தேர்தல் கணக்குகளும், வியூகங்களும் அதிமுகவுக்கு எதிரான மனநிலைமையை வெளிப்படுத்தினாலும், பாஜகவின் வளர்ச்சியை முன்னிறுத்துவதாகவே அமைந்து வருகிறது.

நாராயணா நாராயணா: ஆனால், எல்.முருகன் கூட்டணிக்கு ஆதரவு தந்து ஏன் பேசினார் என்ற சங்கதியும் கசிந்து வருகிறது.. எம்பி தேர்தலில் இந்து அபிமானிகள் அதிகம் உள்ள தென் சென்னை தொகுதியில் இந்த முறை பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எல்.முருகன் உறுதியாக நம்புகிறாராம்.. அதாவது, இங்கே நாராயணன் திருப்பதி அல்லது தனக்கு நெருக்கமான வேறு யாரையாவது நிறுத்தலாம் என்றும் யோசனை உள்ளதாக தெரிகிறது.. ஆனால், அதிமுகவின் ஆதரவு இல்லாமல் இங்கே வெற்றிவாய்ப்பை பெற முடியாது என்பதை முருகன் நன்றாகவே உணர்ந்துள்ளாராம்..

சுவரில் மலர்ந்த தாமரை: அதனால்தான், "அதிமுக கூட்டணி உறுதி. அவர்களிடம் பாஜகவுக்கு 9 சீட் கேட்டுள்ளோம்"என்று ஓபனாகவே சொன்னாராம் முருகன். ஏற்கனவே அதிமுக கூட்டணியுடன் உரசல் போக்கை கையாண்டு வரும் அண்ணாமலையை, முருகனின் இந்த பேச்சு, லேசாக இடித்துரைத்தாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான் நேற்றைய தினம் அண்ணாமலை தந்துள்ள ஒரு பேட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது. பாஜகவின் 43-வது ஆண்டு துவக்க விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை கமலாலயத்திலும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. பிறகு சுவரில் தாமரையை வரையும் நிகழ்ச்சி ஆரம்பமானது. இதில், பெயிண்ட்டால் சுவரில் தாமரையை வரைந்தார் அண்ணாமலை.

4 மடங்கு ஜாஸ்தி: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இது சாதாரணமானது ஒன்று இல்லை, இது ஒரு வரலாறு. திரும்பி பார்க்கும்பொழுது எங்களுக்கே பிரமிப்பாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். அரசியலை பொறுத்தவரை சித்தாந்தமாக செயல்பட வேண்டும். பாஜக அனைத்து நாட்களிலும் உறுப்பினர் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும்.. எங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் இப்போது 4 மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.

அதாவது, உறுப்பினர்எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது என்று அண்ணாமலை இவ்வாறு சொன்னதற்கு காரணம், தன் மீதான அசராத நம்பிக்கை மட்டுமல்ல, தமிழிசை சவுந்தராஜன், எல்.முருகன் காலத்தில் தமிழக பாஜக எந்த வளர்ச்சியும் பெறவில்லை, தான் மாநில தலைமைக்கு வந்தபிறகுதான், கட்சி அமோகமாக வளர்ந்திருப்பதாக பெரிதும் நம்புகிறாராம்.. அவர்கள் மாநில தலைமையில் இருந்தபோதிருந்த வளர்ச்சியைவிட, இப்போது பன்மடங்காக பாஜக வளர்ந்திருப்பதையே வெளிப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, கடந்த 2019 தேர்தலில் 5 சீட்டுக்களையும், 2021தேர்தலில் 7 சீட்களையும் பெற்ற நிலையில், இந்த முறையில் டபுள் டிஜிட் சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருந்து வருகிறார்..

ஒருவேளை சீட் விவகாரத்தில் வழக்கம்போல் அலைக்கழித்தாலோ, அல்லது ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்கினாலோ, தனி அணியாக நின்று களமாட வேண்டும் என்பதே அண்ணாமலையின் நிலைப்பாடாக உள்ளதாக தெரிகிறது. ஆக, கூட்டணி தொடர்பாக, தேசிய அளவிலான வியூகம் ஒருபக்கமும், மாநில தலைமையிலான வியூகம் மறுபக்கமும் என அனலடிக்கிறது தமிழக பாஜக.. தற்போது, தன் தலைமையில் பாஜக வளர்ந்திருப்பதாக அண்ணாமலை கருதினாலும், 5 வருடங்களுக்கு முன்புவரை, "தாமரை மலர்ந்தே தீர வேண்டும்"என்று தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது தமிழிசையின் குரல்தானே? என்று கேள்விகளை எழுப்பிவருகிறார்கள் பாஜகவின் ஒருசாரார்..!!

இதனிடையே, நாளைய தினம் பிரதமர் வருகையையொட்டி, தமிழக பாஜக படுபிஸியாக செயல்பட்டு வருகிறது.. திருவிழாவாக, தமிழக மக்கள் மகத்தான வரவேற்பை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு அணி மற்றும் பிரிவின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என்று அனைவரும் வெற்றிகரமாய் இந்த வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக அண்ணாமலையும் தெரிவித்துள்ளார்.. மற்றொருபக்கம், நாளை சென்னை வரும் பிரதமரை, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், நாளைய தினம் என்ன நடக்க போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+