சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அர்த்தம்" இதுதானா முதல்வரே.. கிரீன்வேஸ் சாலை பங்களாக்களை பறித்து.. ஸ்டாலினுக்கு ஐடியா சொன்ன யுவராஜா

: யுவராஜா, திமுகவின் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அரசு செலவில் அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கார், கிரீன்வேஸ் சாலை பங்களா உள்ளிட்ட எண்ணிலடங்கா சலுகைகளை பறித்து, மக்களை விலையேற்றத்தில் இருந்து காக்க, திமுக அரசு வழி வகை தேட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 8 வருடத்துக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு?5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு?

இதுகுறித்து அவர் சொல்லும்போது, "100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் இருக்கும்.

 வேறு வழியில்லை

வேறு வழியில்லை

மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் என்றும் அறிவித்தார்.. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடர்பு கழகத்திற்கு 43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து, அது இப்போது ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக உள்ளது என்றும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதைத்திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளதால், மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் விளக்கம் தந்திருந்தார்.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

இந்த மின்கட்டண உயர்வுக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.. அந்த வகையில், தமாகா இளைஞரணியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் யுவராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "தமிழ்நாட்டில் பயன்படுத்தும் யூனிட்டுகள் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்து உள்ளதாகவும், வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சாரத் துறையில் கடன் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்ததாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 அறிமுகம்

அறிமுகம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம், மேலும், 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் எனவும், ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

தொடர்கதை

தொடர்கதை

தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் அறிவிப்புகள் என்பது நாளுக்கு நாள் மக்களுடைய அதிருப்தியையும் மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கக்கூடிய அறிவிப்புகளாகவே இருக்கிறது. மின்சாரத் துறையின் சார்பில் ஏற்கெனவே மின்தடை என்பது அறிவிக்கப்படாத ஒன்றாக தொடர்கதையாகி வருகிறது. இதிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய ஒரு போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. மின்சாரத் துறை அமைச்சரிடம் இது பற்றி காரணம் கேட்டால் அணில் போய் வந்து கொண்டிருக்கிறது இதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று ஒரு காரணத்தை கூறினார்.

 குளறுபடி

குளறுபடி

அதன் பிறகு தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார். ஆனால் ஆளும் மத்திய அரசு போதிய நிலக்கரியை தமிழகத்திற்கு கொடுத்து விட்டதாக கூறுகிறது இப்படிப்பட்ட ஒரு குளறுபடியான நிர்வாகத்தை மின்சாரத்துறை நிர்வகித்துக் கொண்டுள்ளது. இந்த மின் கட்டண மாற்றம் என்பது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அரசு தரப்பில் பல்வேறு காரணங்களை காட்டினாலும் கூட அவை அனைத்தும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

 அர்த்தம் இதுதானா?

அர்த்தம் இதுதானா?

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வோம் என்று கூறுவதன் அர்த்தமா இது? ஏற்கெனவே அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து உள்ள சூழ்நிலையில் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும். கொரோனா காலகட்டம் என்பதால் மக்களின் வருமானம் குறைந்து வரும் சூழ்நிலையில் இது போன்ற மின் கட்டண உயர்வு சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Recommended Video

    EB கட்டண உயர்வு | பொய் சொல்வது திமுகவா ? பாஜகவா ?
    சலுகைகள்

    சலுகைகள்

    அரசின் இந்த மாதிரியான செயல்கள் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக முதல்வர், அரசு செலவில் அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கார் , கிரீன்வேஸ் சாலை பங்களா உள்ளிட்ட எண்ணிலடங்கா சலுகைகளை பறித்து மக்களை விலையேற்றத்தில் இருந்து காக்க வழி வகை தேட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.

    English summary
    When will the electricity tariff hike be cancelled and tmc youth wing president yuvaraja condemn யுவராஜா, திமுகவின் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X