சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"காய் நகர்த்தும்" ஸ்டாலின்.. க்ளுக்கென சிரித்த உதயநிதி.. கலக்கல் "சதுரங்கம்".. பரபரக்கும் அரசியல்

உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட், தமிழக அரசியல் களத்தை உற்று நோக்க வைத்து வருகிறது.. இதற்கு பின்னணியில் பல காரணங்களும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.

2022-ம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

அதனால், இந்த போட்டியை தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்டது.

 அடடே.. இதை பாருங்க! இளம் வயதில் திமுகவுக்காக வாக்கு சேகரித்த உதயநிதி! கலக்கும் பழைய ஃபோட்டோஸ் அடடே.. இதை பாருங்க! இளம் வயதில் திமுகவுக்காக வாக்கு சேகரித்த உதயநிதி! கலக்கும் பழைய ஃபோட்டோஸ்

 உன்னிப்பான கவனம்

உன்னிப்பான கவனம்

இதனிடையே அந்த தருணத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தால், அந்த சான்ஸ் சென்னைக்கு கிடைத்தது... வரும் ஜூலை 28 அன்று 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்பட்டு வருகிறது.. இதனால் சர்வதேச அளவில் தமிழகத்தை பிற மாநிலமும், நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.. இதற்காக தமிழக அரசு 92 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறது...

மாமல்லபுரம்

மாமல்லபுரம்

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தையும் முதல்வர் வெளியிட்டுவிட்டார்.. இது தொடர்பான பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனும் முழுவீச்சில் கவனித்து வருகிறார். இந்நிலையில், இந்த போட்டிக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே உள்ளதால், இதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் நேரடியாக இன்று ஆய்வு செய்யப்பட்டன.. இதுகுறித்து, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

மெய்யநாதன்

மெய்யநாதன்

அதில், "செஸ் விளையாட்டின் மிகப்பெரிய போட்டியான #ChessOlympiad-ன் 44-வது போட்டி வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தோம்" என்று பதிவிட்டு அமைச்சர் மெய்யநாதனையும் உதயநிதி டேக் செய்துள்ளார்.

 சூப்பர் ட்வீட்

சூப்பர் ட்வீட்

இந்த நிகழ்வுக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? இதற்காக ஸ்பெஷல் ட்வீட்டை ஏன் உதயநிதி பதிவிட்டுள்ளார் என்ற சந்தேகமும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இதெல்லாம் காரணம் இல்லாமல் இருக்காது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. கடந்த சில மாதமாகவே, உதயநிதியை அமைச்சரவைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கட்சி மேலிடம் முனைப்பு காட்டி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த ஜூன் மாதமே அமைச்சரவையில் மாற்றம் என்றார்கள்.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

 பள்ளிக்கல்வி துறை

பள்ளிக்கல்வி துறை

அதேசமயம், உதயநிதிக்கு எந்த துறையை ஒதுக்க போகிறார்கள் என்ற கேள்வியும் கிளம்பியது.. முதலில் பள்ளிக்கல்வித்துறையை ஒதுக்கப்போகிறார்கள் என்றார்கள்.. பிறகு, ஸ்டாலின் ஏற்கெனவே வகித்த உள்ளாட்சித் துறையை தர போகிறார்கள் என்றார்கள்.. பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என்று 2ஆக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அவைகளை ஒன்றாக்கி, உதயநிதியிடம் தரப்போகிறார்கள் என்றார்கள்.. இப்படி எதுவுமே நடக்கவில்லை. இதற்கு பிறகு, உதயநிதிக்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்தன..

 புது போஸ்டிங்கில் உதயநிதி

புது போஸ்டிங்கில் உதயநிதி

அந்த சமயத்தில்தான், முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், அந்த துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள், ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம், வட சென்னையில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் என பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

 சபாஷ் போட்டி

சபாஷ் போட்டி

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்று சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் அதிகமாக நடத்தி சர்வதேச கவனத்தை தமிழகம் நோக்கி திருப்பலாம், அதன் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்கலாம் என்றும் முதல்வர் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.. ஒருவேளை, உதயநிதியை மனதில் வைத்தே முதல்வர் இப்படியெல்லாம் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டதாக, அந்த சமயத்தில் முணுமுணுப்புகளும் வெடித்தன.. மற்றொருபுறம், அவ்வளவாக பிரபலமாகாத விளையாட்டு துறையை ஒதுக்கினால், அதை மக்களிடம் தன்னால் பிரபலப்படுத்தி சாதிக்க முடியும் என்று உதயநிதியே நம்புகிறாராம்..

Recommended Video

    கைராசியில் எனக்கு நம்பிக்கை இல்லை.. மரநடுவிழாவில் உதயநிதி ஸ்டான் பேச்சு - வீடியோ
    மெய்யநாதன்

    மெய்யநாதன்

    மேலும் இளைஞர்களையும் வெகுவாக இழுக்க முடியும் என்றும் நினைக்கிறாராம்.. அதனால்தான், இந்த துறையில் சிறப்பு கவனத்தை செலுத்த போவதாகவும் கூறப்பட்டன.. இந்த சம்பவங்களை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், உதயநிதிக்கு நிச்சயம், விளையாட்டு துறைதான் ஒதுக்கப்படும் என்றே உறுதியாகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது அமைச்சராக உள்ள மெய்யநாதன், உதயநிதிக்கு மிகவும் நெருங்கியவர்.. உதயநிதிக்காக எதையும் செய்யக்கூடியவர்.. அதனால், பதவியை இவரிடம் இருந்து பெற்றாலும், நிச்சயம் வருத்தப்படமாட்டார், அதனால் பிற துறை அமைச்சர்களுக்கும் பாதிப்பு இருக்காது என்பதே திமுக மேலிடம் போடும் கணக்காகும்.. ஆக மொத்தம்.. உதயநிதிக்கு புரமோஷன் கன்பர்ம்டு..!

    English summary
    When will udhayanidhi Stalin get new posting and What is cm mk Stalin's surprise உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X