ஆமா நீங்கள் எப்ப பாஜகவின் தலைவரானீர்கள்? சொந்த காசில் சூனியம்.. அண்ணாமலை டீம் மீது காயத்ரி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை கட்சியிலிருந்து வெளியே போ என சொன்ன ட்வீட்டுக்கு லைக் கொடுத்த பாஜக நிர்வாகி எப்போது கட்சியின் தலைவரானார் என தெரியவில்லை என்று பாஜக காயத்ரி விமர்சனம் செய்துள்ளார்.

வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்தார். ஆனால் அவரது பதவி திடீரென பறிக்கப்பட்டது.

இதனால் காயத்ரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருக்கும் காயத்ரியை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்ற கோபம் காயத்ரிக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

மரியாதை

மரியாதை

மேலும் தனது பதவிக்கு உரிய மரியாதையை அண்ணாமலை தரவில்லை என காயத்ரி அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அதாவது அண்ணாமலை புகைப்படத்தை டிபியாக வைத்திருக்கும் சிலர் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் சிலர் பிரதமர் ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு.

அண்ணாமலை

அண்ணாமலை

தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லனா மானாட மயிலாட போய் கொரியோகிராபர் வேலையை பாரு என காயத்ரியை மறைமுகமாக அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இந்த ட்வீட்டிற்கு தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலவர் செல்வகுமார் லைக் கொடுத்துள்ளார். இது காயத்ரிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதற்கு காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டில் வார் ரூம் ஊழியர்களாக இருந்தாலும் சரி செல்வக்குமாரின் ஊழியர்களாக இருந்தாலும் சரி நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் போலி உலகமான இணையத்தில் யாரும் விழப்போவதில்லை. அது போல் அந்த போலி உலகில் தேர்தலும் நடக்க போவதில்லை. நீங்கள் எல்லாம் ஒரு நாள் சிக்குவீர்கள். மூத்த தலைவர்களை யார் இப்படி இழிவுப்படுத்தி வருகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். தைரியம் இருந்தால் என்னிடம் மோதி பாருங்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நான் நிறைய முறை கிண்டல் செய்யப்பட்டேன், விமர்சிக்கப்பட்டேன். அது பல் பல முறை திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினராலும் விமர்சிக்கப்பட்டேன். கடந்த மாதம் இல கணேசன் ஐயாவை இந்த டீம்தான் (அண்ணாமலை ஆதரவு அணியை சொல்கிறார்) விமர்சனம் செய்தது என்பது எங்களுக்கு தெரியும். பாஜகவுக்கு இல கணேசன் புற்றுநோய் உண்டாக்கும் கிருமி என குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் பார்த்தால் சொந்த கட்சியினரையே டிரோல் செய்யும் நீங்கள்தான் பாஜகவுக்கு புற்றுநோய் உண்டாக்கும் கிருமி. யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா?

 சக கார்யகர்த்தா

சக கார்யகர்த்தா

சக கார்யகர்த்தாவை மதிப்பது முக்கியமானது. ஆனால் சொந்த கார்யகர்த்தாவையே விமர்சிக்கும் போக்கும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். பாஜகவின் நிர்வாகிகளால் பாஜக டிரோல் செய்யப்படுகிறது என காயத்ரி தெரிவித்துள்ளார். அது போல் மற்றொரு ட்வீட்டில் காயத்ரி கூறியிருப்பதாவது: செல்வக்குமார் எப்போது பாஜக தலைவரானார் என்பது தெரியவில்லை. அவரும் அவருடைய ஆதரவாளர்களும் என்னை விமர்சிக்கிறார்கள்.

பாஜகவுக்கு எதிராக என்னை சித்தரிப்பது ஏன்?

பாஜகவுக்கு எதிராக என்னை சித்தரிப்பது ஏன்?

என்னை தலைவருக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் என்னை செல்வகுமார் டீம் சித்தரிப்பது ஏன்? எந்த கட்சியாக இருந்தாலும் என்னை பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன். அவர்களுடைய தவறுகளிலிருந்து பாதுகாக்க தலைவரின் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் (செல்வகுமாரின் டீம்) டீம் என்னை அதிகளவில் தாக்கினாலும் அதைவிட நான் உங்களையும் உங்கள் வார் ரூமையும் நிறுவனத்தையும் எதுவாக இருந்தாலும் காட்டிக் கொடுப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+