மட்டன் வாங்க.. ஆசை ஆசையாய் கறிக்கடைக்கு போன நபர்.. புளியந்தோப்பில் அதென்ன "தொங்குது".. மலைத்த சென்னை
சென்னை: சென்னை புளியந்தோப்பில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.. இதை கேள்விப்பட்டு பதைபதைத்து போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.. அப்படி என்ன நடந்தது?
இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக விற்பனையாகும்.. அந்தவகையில் 5 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுகின்றன.. ஒரு கிலோ ரூ.700 வரை இங்கு விற்கிறார்கள்.. ஆனால், இதுவே, மட்டன் கடைகளில் 1 கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது...

இறைச்சி கூடம்: அதனால், புளியந்தோப்பு இறைச்சி கூடத்துக்கு அருகிலேயே சிலர் மட்டனை விற்கிறார்கள்.. 1 கிலோ மட்டன் ரூ.600க்கு விற்கிறார்கள். இதுதான் பலருக்கு சந்தேகத்தை கிளப்பியது.. மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது, இந்த பகுதியில் மட்டும் ஒரு கிலோ ரூ.600-க்கு எப்படி விற்க முடியும்? என்று பொதுமக்கள் குழம்பினார்கள்.
இதற்கு பிறகுதான் விஷயமே புரிந்தது.. ராஜஸ்தான், சூரத் போன்ற பகுதிகளிலிருந்து ஆடுகள் இங்கு கொண்டு வரப்படும்.. இந்த ஆடுகளைதான் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வெட்டுவார்கள்.
லாரிகள்: ஒரு லாரிக்கு, கிட்டத்தட்ட 350 ஆடுகளை ஏற்றி கொண்டுவருவார்களாம்.. இப்படி 15 லாரிகளுக்கு மேல், புளியந்தோப்பு இறைச்சி கூடத்துக்கு வரும்.. இப்படி கொண்டு வரும்போது, ஆடுகள் ஒன்றோடு ஒன்று நெரிசலில் சிக்கி, லாரியிலேயே நான்கைந்து இறந்துவிடுமாம். ஒரு லாரியிலேயே இத்தனை ஆடுகள் என்றால், 15 லாரிகளில், எப்படியும் 50 ஆடுகளுக்கு மேல் சென்னை வருவதற்குள்ளேயே இறந்துவிடுகின்றன..
நடுவழியில் இறந்துபோன அந்த ஆடுகளை, அந்த பகுதியில் உள்ளவர்கள், மிக மிக குறைந்த விலைக்கு வாங்கி, அவைகளை வெட்டி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்துவிடுவார்களாம்.
ஞாயிற்றுக்கிழமை: மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்ற ஆடுகளை வெட்டும்போது, இந்த ஆட்டையும் கொண்டு வந்து விற்றுவிடுவார்களாம்.. 2 கறிகளுக்கும் கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியாதாம். இறைச்சி கூடத்துக்கு அருகிலேயே, விற்பதால்தான், விலையும் குறைவாக உள்ளது என்று நினைத்து, பொதுமக்களும் இது தெரியாமல் வாங்கி சென்றுவிடுவார்களாம்.
ஆனால், புளியந்தோப்பு இறைச்சி கூடத்தை பொறுத்தவரை, எப்போதுமே உயிருள்ள ஆட்டைதான் விற்பார்கள்.. ஒருவேளை ஆடுகள் லாரிகளில் செத்து வந்தால், அதனை வெட்டாமல் தூக்கி போட்டுவிடுவார்களாம். எனவே, மாநகராட்சி கூடத்தில் இப்படி யாரும் விற்பதில்லை.. அந்த பகுதிக்கு வெளியே, ஒருசிலர் இப்படி செத்த ஆடுகளை வாங்கி, பதப்படுத்தி விற்கிறார்களாம்.
ஆட்டுக்கறி: எப்போதுமே இறந்த ஆடுகளை பதப்படுத்தி சாப்பிடக்கூடாது.. உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி, உடனடியாக சாப்பிட வேண்டும்.. அதையும் ஃப்ரிட்ஜில் வைத்து நாள் கணக்கில் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் சில இடங்களில் பூனைக்கறி வியாபாரம் கொடிகட்டி பறந்தது. அதாவது, பூனைகளை கொன்று, தோலை உரித்து, ஆட்டுக்கறியுடன் கலந்து விற்றுவிட்டார்கள்.
நரிக்குறவர்கள்: நரிக்குறவர்களிடமிருந்து வாங்கும் எலும்பில்லா பூனைக்கறியை, மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி போன்றவைகளை தயாரித்துள்ளனர்..
அதேபோல, இரவு நேரங்களில் அப்பார்ட்மென்ட்களின் அருகில் சுற்றித்திரியும் பூனைகள் பிடிக்கப்பட்டு பார்ப்பதற்கு அழகாக உள்ள பூனைகள் வசதி படைத்தவர்களிடம் விற்கப்படுமாம். அனைத்து ஓட்டல்களிலும் இப்படி நடப்பதில்லை என்றாலும், சில நடைபாதை ஓட்டல்களில் இப்படி நடந்துள்ளது.
பூனைக்கறி: அதேபோல, பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு பூனை இறைச்சியை விற்றுள்ளனர்.. இதையடுத்து அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் இறங்கி, 2 பேரை கைது செய்திருந்ததையடுத்து, இந்த சம்பவம் முற்றுப்பெற்றது. இப்போது, இறந்த ஆடுகளை விற்பது தொடர்பாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி?












Click it and Unblock the Notifications