வாய்விட்டு கேட்ட வைகோ.. தெலுங்கில் "மாட்லாடிய" துரை.. மீண்டும் குறி?.. கோதாவில் குதித்த மதிமுக.. செம
வரும் எம்பி தேர்தலில் துரை வைகோ சிவகாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
சென்னை: வரும் எம்பி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஜரூர் வேகத்தில் தயாராகி வரும்நிலையில், மதிமுகவும் களத்தில் குதித்துள்ளதாம்.. இது அத்தொண்டர்களுக்கு குஷியை தந்து வருகிறது..!!
துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்...
ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த தான், தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா? என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சியதும், குழம்பியதும் உண்மைதான்.

துரை வைகோ
எனினும், முக்கிய பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்.. இவர் கட்சியின் மிகமுக்கிய பொறுப்பை ஏற்றதுமே, தன் மீதான கவனங்களையும் குவிய வைத்தார்.. அதன்படி, வரும் தேர்தலில் துரைவைகோ போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் பரபரத்தன.. அதற்கேற்றவாறு சில செய்திகளும் யூகமாக வந்தன.. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் திருவிழாவில் வைகோ தவறாமல் கலந்துகொள்வது வழக்கம்.. இந்த முறை பாஞ்சாலங்குறிச்சி வரை தொடர் ஜோதி ஓட்டத்துக்கு சிறப்பான ஏற்பாடும் செய்யப்பட்டு, துரைவைகோவிடம், இந்த தொடர் ஜோதியை முதல்முதலாக கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை
இந்த திருவிழா தொடர்பான விழா குழுவினருடன் அடிக்கடி துரை வைகோவும் ஆலோசனை நடத்தியதாகவும், அவர்களுடன் தெலுங்கு மொழியில் பேசியதாகவும்கூட செய்திகள் கசிந்தன.. அப்படியானால், தூத்துக்குடியை குறி வைத்து துரைவைகோ களமிறங்க போகிறாரா என்ற யூகம் கிளம்பியது.. அதற்கு பிறகு, வைகோ வழக்கமாக போட்டியிடும் கோவில்பட்டியில் போட்டியிடக்கூடுமோ? என்ற அடுத்த சந்தேகம் கிளம்பியது.. கோவில்பட்டியில் ஒருமுறை நடந்த மாவட்ட மதிமுக கூட்டத்தில் துரை வைகோ பேசியதும் இந்த சந்தேகத்தை வலுவாக்கியது.

டாக்குமெண்ட்ரி
"வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம், விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது, தலைவர் வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்" என்று கூறியிருந்தது கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களிடையே மிகுந்த அதிர்வலைகளையும் உண்டாக்கியிருந்தது.. இதற்கு பிறகு, சிவகாசி தொகுதியில் துரை வைகோ போட்டியிடலாம் என்று அடுத்த யூகம் கிளம்பி உள்ளது.. அதற்கேற்றாற்போல், சிவகாசியில்தான் வைகோவின் ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

நிழலும் நிஜமும்
இந்த நிகழ்ச்சியில்தான், தமிழக ஆளுநரை கடுமையாக துரைவைகோ விமர்சித்திருந்தார்.. தமிழக முதல்வரின் முடிவுகளுக்கு மத்திய அரசு தடைக்கல்லாக உள்ளது, ஆளுநர் ரவி, மத்திய அரசின் ஏஜெண்டாகவே செயல்படுகிறார் என்றும் ஓபனாகவே விமர்சித்திருந்தார்... இவையெல்லாம் வழக்கமாக நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் என்றே முதலில் கணித்தனர்.. ஆனால், நிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி எம்பி தொகுதியில் போட்டியிட வைகோ மகன் துரைவைகோ முடிவு செய்துள்ளாராம்.. தேர்தல் அரசியலில் குதிக்க துரைக்கு அதீத விருப்பம் உள்ளதால், தேர்தல் பணிகள் குறித்து இப்போதே பல்வேறு திட்டங்களை ஆலோசித்தும் வருகிறார்..

வைகோ
சிவகாசி தொகுதியை பொறுத்தவரை நாடார் சமூகத்தினர் அதிகளவில் இருக்கிறார்கள்.. இதற்கு அடுத்தபடியாக நாயுடு சமூகத்தினரும், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எண்ணிக்கையில் முறையே அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.. எனினும் நாடார் சமூகத்தினரின் வாக்குகள்தான் இந்த தொகுதியின் வெற்றி தோல்வியை எப்போதுமே நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக, காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.. ஆனால், மதிமுக ஒரே ஒரு முறை மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது..

டபுள் டவுட்
இந்த முறையும் சிவகாசி தொகுதிக்கு வலையை மதிமுக வீசியுள்ள நிலையில், துரைவைகோவின் அடுத்தக்கட்ட அரசியல் ஆரம்பமாகி உள்ளது.. ஒருவகையில் இது வைகோவுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.. தனக்கு தேவையான சீட் எண்ணிக்கையாகட்டும், தொகுதிகளாகட்டும் வாய்விட்டு நேரடியாகவே ஸ்டாலினிடம் கேட்டு பெறுபவர் வைகோ.. முதல்வர் ஸ்டாலினும் வைகோ மீது நிறைய நம்பிக்கையையும், மரியாதையையும், வைத்திருப்பவர்.. அந்த வகையில், திமுக கூட்டணியில் இந்த முறையும் மதிமுக இடம்பெறும் பட்சத்தில், சிவகாசி தொகுதி துரை வைகோவுக்கு ஒதுக்கப்படுமா? என்றெல்லாம் மிகப்பெரிய ஆர்வமாகவும், எதிர்பார்ப்பாக மதிமுகவினரிடம் கிளம்பி உள்ளது..!!












Click it and Unblock the Notifications