எங்கே போனார் எடப்பாடி.. அப்செட்?.. சட்டசபை புறக்கணிப்பு?.. போராட்டத்திலும் பங்கேற்கவில்லை?
எடப்பாடி பழனிசாமி இன்றைய பேரவையிலும் கலந்து கொள்ளவில்லை
சென்னை: மிக மிக முக்கியமான பிரச்சனைகள் சட்டப்பேரவையில் தினம் தினம் நடந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை காணவில்லை... அவர் எங்கே போனார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதும் தெரியவில்லை..!
Recommended Video
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை துவங்கியது.. அண்ணாமலை பல்கலையுடன் ஜெ.பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
ஜெ.பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் மசோதவை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது...!

எதிர்ப்பு
விழுப்புரத்தில் அமைந்திருக்ககூடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருக்ககூடிய பல்கலை கழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அப்போதே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது... முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பழகன் அப்போதே இதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.

அமளி
இன்று அந்த சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது...ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்...

போராட்டம்
பிறகு கலைவாணர் அரங்கம் எதிரே வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்... போராட்டத்தில் ஈடுபட்ட ஒபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்... கைது செய்த எம்எல்ஏக்கள் அனைவரையும் போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்... இவ்வளவும் நடந்து முடிந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியை இன்று காணோம்.. சட்டசபைக்கு வரவில்லை.. அவர் ஏன் சட்டசபைக்கு வரவில்லை என்பதுதான் பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.

பிரச்சனை
இந்த முறை சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பித்ததுமே, அதற்கு எதிர்வினையாற்றுவது என்பதை ஏற்கனவே அதிமுக மேலிடம் எடுத்த முடிவுதான்.. முக்கிய பிரச்சினைகளை எழுப்பி கூட்டத்தொடரை தன்வசப்படுத்த வேண்டும் என்று அதிமுக தரப்பு ஒரு முடிவோடுதான் இருந்தனர்... மேலும் திமுக அறிவிக்கபோகும் எந்தவித திட்டங்கள் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்றும் முடிவில் இருந்தனர். அதன்படியே, கூட்டதொடர் ஆரம்பித்ததும் தங்கள் புறக்கணிப்பையும் தொடர்ந்தனர்..

எடப்பாடி
ஆனால், அதிமுக மேலிடம் பக்கமே திமுக யூடர்ன் அடித்து விவகாரத்தை கிளப்பியதை, இரட்டை தலைமை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. முதல்நாள் ஓபிஎஸ் மீதான, புளியந்தோப்பு கட்டிடம் மீதான புகார் வாசிக்கப்பட்டது.. மறுநாள் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியன் மீதான புகாரை திமுக கிளப்பியது.. இதில் இரு தலைவர்களுமே கொந்தளித்து விட்டனர்.. அன்றைய தினம் ஆளுநரை சந்திக்க ஓடினாலும், அதில் பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை.. தர்ணாவும், அமளியும் கைகொடுக்கவில்லை.. பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் ஒதுங்கி கொண்டுள்ளது..

பகைமை
இதனால் உஷாரானா ஓபிஎஸ், திமுக பக்கம் சாய ஆரம்பித்துள்ளார்.. வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் காட்டிக் கொள்ளாமல், திமுகவை புகழ்ந்தும், இணங்கியும் சட்டசபையின் கவனத்தை திசை திருப்ப ஆரம்பித்துவிட்டார்.. இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை என்றாலும், இந்த போக்குதான் ஓபிஎஸ்ஸுக்கு தற்சமயம் கை கொடுத்து வருகிறது.

பொறுப்பு
ஆனால், எடப்பாடி பழனிசாமி இதைகூட செய்யவில்லை.. இத்தனைக்கும் அவர்தான் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர்.. இந்த பதவியை பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும், வியூகங்களும் ஏராளம்.. கேபினெட் பதவிக்கு இணையான பதவிதான் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது.. இந்த அளவுக்கு எம்எல்ஏக்களை பெற்று தந்ததே தன்னுடைய முயற்சியால்தான் என்று அதிமுகவில் சொல்லி கொண்டிருப்பவர்.. அப்படி இருந்தும், திமுகவை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி சபையில் கலந்து கொள்ளாதது பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆலோசனை
கடந்த வாரங்களில் எத்தனையோ நிகழ்வுகள் சட்டசபையில் நடந்தன.. தீர்மானங்கள் இயற்றப்பட்டன.. எதிலுமே எடப்பாடி பங்கெடுக்கவில்லை.. மாறாக, நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவே செய்திகள் வந்தன.. கட்சி சம்பந்தப்பட்ட ஆலோசனை என்றால், ஓபிஎஸ் இல்லாமல் எப்படி நடத்தியிருக்க முடியும்? ஓபிஎஸ் அந்த நேரங்களில் சட்டசபையில் பங்கெடுத்து வந்தார்.. அப்படியானால், அது எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிரச்சனை குறித்த விவகாரமாக இருக்கலாம் என்றே யூகிக்கப்படுகிறது.

வேளாண்
3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் போதும் அவர் சபையில் இல்லை... சொந்த ஊரில்தான்.. இருந்தார்... இத்தனைக்கும் இந்த வேளாண் சட்டத்தை முதலில் வந்து அன்று ஆதரித்தவரே எடப்பாடி பழனிசாமிதான்.. அதேபோல, இன்று ஜெயலலிதா பல்கலை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் தீர்மானத்தின்போதும் அவர் சபைக்கு வரவில்லை...

கொடநாடு
சமீப காலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளம்பியுள்ள கோடநாடு வழக்கும், உயர் நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்ததும் அவரை அப்செட்டாகியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தனது வழக்கின் நிலை குறித்து முன்னாள் நீதிபதி ஒருவருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் சட்டப்பேரவைக்கு அவர் ஆப்செண்ட் என அதிமுக வட்டார தகவலாக உள்ளது.

கைது
சி.வி.சண்முகம் கூட சொந்த ஊரில் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளார்... சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்றாலும், எடப்பாடியின் இருத்தலே இன்றைய தினம் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அவரை எங்குமே காணமுடியவில்லை... எது எப்படியோ ஏதோ ஒருவகையில் எடப்பாடியை திமுக முடக்கிவிட்டது என்றே சொல்லலாம். பலம் பொருந்திய திமுகவை எதிர்க்க, வலிமை பொருந்திய அதிமுகவே இன்றைய தினம் கட்டாய தேவையாக உள்ளது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி எங்கே இருக்கிறார்? என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications