"புஷ்பா புருஷன்கள்".. இந்த மேடம் இருக்காங்களே.. இவருக்கு 2 பேர் போட்டியாம்.. என்னாச்சு தெரியுமா?

கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேர் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி உள்ளனர்.. தகராறு, அடிதடி, வெட்டுக்குத்து, வரை சென்றுவிட்டது.. யாருக்காக சண்டை போட்டுக் கொண்டார்களோ, அந்த பெண் இப்போது ஜெயிலில் உள்ளார்.

சென்னை, கேகே நகர், விஜயராகவபுரத்தை சேர்ந்தவர் ரவி.. 26 வயதாகிறது.. எம்எம்டிஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில், கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

மனைவி பெயர் ஐஸ்வர்யா.. 23 வயதாகிறது.. கேகேநகர், சத்யா கார்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில், ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு 2 வயதில் ஜெசிகா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த ரவி திடீரென காணாமல் போனார்.. எங்கே போனார் என்று தெரியவில்லை..

 கோயம்பேடு

கோயம்பேடு

ரவி காணாமல் போன சமயத்தில், ரவியின் வீட்டு பக்கத்தில் குடியிருந்த செந்தில் குமார் என்பவரும் வீட்டை காலி செய்தார். அதாவது ரவி 1ம் தேதி காணாமல் போனால், செந்தில்குமார் 31-ம் தேதி வீட்டை காலி செய்துள்ளார். இவர் கோயம்பேடு ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகிறார்.. காணாமல் அன்று, ரவியை கோயம்பேடு போலீசார் அழைத்து சென்றதாக கேள்விப்பட்டு, கணவனை தேடி ஐஸ்வர்யாவும் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.. ஆனால், அங்கிருந்த போலீசாரோ, நாங்கள் யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவில்லை என்று சொல்லி உள்ளனர்.

 டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இதனால், குழம்பிப்போன ஐஸ்வர்யா, கணவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், கடைசியில் கேகே நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ரவியை தேடி வந்துள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், செந்தில்குமார், கோயம்பேடு ஸ்டேஷனில் இருந்து, திடீரென செம்பியம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்... எதற்காக டிரான்ஸ்பர் என்று தெரியவில்லை.. ஆனாலும் டியூடிக்கு போகாமல் இருந்துள்ளார்.. அதேபோல அவர் வீடும் எங்கே என்று தெரியவில்லை.. சில நாட்களாகவே செந்தில்குமாரும் கண்ணில் தென்படவில்லை.

 ஆண் சடலம்

ஆண் சடலம்

இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.. இதையடுத்து, அது தொடர்பான விசாரணையில் இறங்கியது.. அப்போதுதான், ரவியும், செந்தில்குமாரும் பலவருட கால நெருங்கிய நண்பர்கள் என்பதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் சண்டை வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.. நீண்ட காலமாக நட்பில் இருந்தவர்களுக்கு, எதனால் இந்த தகராறு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுத்தது.. இதனிடையே, கணவரை கண்டுபிடித்து தருமாறு, ஐஸ்வர்யா, கோர்ட்டில் ஆட் கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 கருகிய சடலம்

கருகிய சடலம்

விசாரணை இப்படி இரு தரப்பிலும் நடந்து கொண்டிருக்கும்போதுதான், மதுராந்தகம், பழையனூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு ஆண் சடலம் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. உடனே அங்கு சென்று பார்த்தபோது, அந்த உடல் துண்டாக்கப்பட்டிருந்தது.. உடல் எரிந்த நிலையில் கருகிப்போய் கிடந்தது.. அந்த சடலம் குறித்து விசாரித்தபோதுதான், கே.கே.நகரில் ரவி காணாமல் போனதும் தெரியவந்தது.. பிறகு, கேகே நகர் போலீசாருக்கு, பட்டாளம் போலீசார் தகவல் சொல்லவும், அங்கு விரைந்து சென்று சடலத்தை பார்த்தபோது, அது ரவி என்பது தெரியவந்தது.

 தண்ணி அடித்தார்

தண்ணி அடித்தார்

இதன்பிறகுதான் இரு தரப்பு போலீசாரும் சேர்ந்து விசாரணையை துரிதப்படுத்தினர். இறுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் ரவி கொலை செய்யப்பட்டுள்ளதும், இதில் போலீஸ்காரர் செந்தில்குமாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, இதில் கவிதா என்ற பெண்ணின் பெயரும் அடிபட்டது.. செந்தில்குமாரும் தலைமறைவாக உள்ளதால், கவிதாவை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர் போலீசார்.. அப்போதுதான், கவிதா என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

 கள்ளக்காதலி

கள்ளக்காதலி

மொத்த உண்மையையும் கவிதா போலீசில் சொல்லிவிட்டார்.. அவர் சொல்லும்போது, "நான் செந்தில்குமாரின் கள்ளக்காதலி.. 2 பேரும் ஒன்றாகவே குடும்பம் நடத்தினோம்.. அப்போதுதான், ரவி எனக்கு பழக்கமானார்.. இந்த விஷயம் செந்தில்குமாருக்கு தெரிந்துவிடவும், அவர் ரவியுடன் சண்டைப்போட்டார்.. பிறகு, சம்பவத்தன்று, ரவியை சமாதானம் பேசுவதற்கு, செந்தில்குமார் வீட்டிற்கு அழைத்தார்.. பிறகு ரவி தண்ணி அடித்தார்.. போதை தலைக்கேறியதும், "அவள் என்ன உன் பொண்டாட்டியா?" என்று செந்தில்குமாருடன் சண்டைப்போட்டார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், ரவியை அடித்து உதைத்து கீழே தள்ளி, கழுத்தில் கால் வைத்து மிதித்து கொன்றுவிட்டார்.

கவிதா

கவிதா

அதற்கு பிறகு, நானும் செந்தில்குமாரும், சடலத்தை மூட்டையாக கட்டி வைத்துவிட்டு, வீட்டையும் காலி செய்வது போல் வேனில் சில பொருட்களுடன் சேர்த்து சடலத்தையும் ஏற்றினோம்.. பழையனூர் நெடுஞ்சாலையில் வைத்து, உடலை துண்டாக்கி.. பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டோம்" என்றார். இந்த வாக்குமூலத்தை அடுத்து, கவிதாவை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள செந்தில் குமாரை தேடி வருகிறார்கள்.. இந்த கொலை வழக்கில் மேலும் 5 பேருக்கும் தொடர்பு உள்ளதால் அவர்களையும் தேடி வருகிறார்கள்.. ஒரு பெண்ணுக்கு 2 பேர் வெட்டி குத்திக் கொண்டு, கொலை வரை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+