Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாமியார்".. வீட்டிற்குள்ளிருந்து அந்த சத்தம்.. வாசற்படியிலேயே பரிதாப மருமகள்.. மிரண்டு போன மாங்காடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இருந்தாலும், என் மாமியாருக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று கதறுகிறார் மதுபாலா.. கண்ணீர் மல்க மருமகள் வீட்டு வாசற்படியிலேயே 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். என்ன நடக்கிறது மாங்காட்டில்?

சென்னை போரூர் அடுத்துள்ளது கெருகம்பாக்கம்.. இங்கு வசித்து வருபவர் செந்தமிழ்செல்வன்.. 39 வயதாகிறது.. இவர் ஒரு வக்கீல்.. 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

மனைவி பெயர் மதுபாலா.. கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. இவர்களுக்கு 4 வயதில் கோஷல் என்ற மகன் உள்ளான்.

Where is Madhubalas child and What did the mother-in-law do to the young woman near Mangadu chennai

மதுபாலா மகிழ்ச்சி: ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த திருமண வாழ்வில், நாளடைவில் தகராறுகள் வெடித்துள்ளன.. இதனால் மனம்வெறுத்துப்போன மதுபாலா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகனை அழைத்து கொண்டு மைசூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார்... ஆனால், செந்தமிழ்ச்செல்வனோ, தன்னுடைய நண்பர்களுடன் மைசூருக்கே சென்று, மாமியார் வீட்டில் நுழைந்து, மகனை தூக்கி கொண்டு வந்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மதுபாலா, மைசூர் போலீசில் புகார் தந்தார்.. மேலும், மகனை மீட்டு தரக்கோரி மைசூர் கோர்ட்டிலும் கேஸ் போட்டார்... இதுகுறித்த வழக்கில், மகனை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் சொல்லிவிட்டது.. ஆனாலும், இதுவரை, மகனை மதுமாலாவிடம் செந்தமிழ்ச்செல்வன் ஒப்படைக்கவில்லை. அத்துடன், மனைவியையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை..

மருமகள் - மாமியார்: இதனால், தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு, கணவர் வீட்டிற்கு கிளம்பி வந்தார்.. அப்போது செந்தமிழ்ச்செல்வன் வீட்டில் இல்லை. குழந்தையுடன் வீட்டிலிருந்த மதுமாலாவின் மாமியார், மதுமாலாவை பார்த்ததுமே, படக்கென கதவை அடைத்துவிட்டார்.. மருமகளையும் உள்ளே அனுமதிக்கவில்லை.. இதனால் அதிர்ந்து போன மதுமாலா, என்ன செய்வதென்றே தெரியாமல், கணவர் வீட்டின் முன்பு, தன்னுடைய அம்மாவுடன், அங்கேயே தரையில் உட்கார்ந்துவிட்டார்.. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வாசற்படியில் தர்ணா: இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், கதவை திறக்கும்படி சொன்னார்கள்.. ஆனால் மாமியார், போலீசார் வந்தும்கூட, கதவை திறக்கவில்லை.. வீட்டுக்குள்ளிருந்தே போலீசுக்கு பதிலை சொன்னார்.. இதனால் போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.. உடனே மாமியார், "போலீஸ், வீட்டுக்குள்ளே வந்தால் குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்று ஒரே போடாக போட்டார். இதைக்கேட்டதும் போலீசார் அதிர்ந்துபோனார்கள்.. கதவை உடைத்து வீட்டுக்குள்ளேயும் செல்ல முடியவில்லை..

மதுபாலாவோ, தன்னுடைய குழந்தையை அழைத்து செல்லாமல் அங்கிருந்து நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்.. ஒருபக்கம் வீட்டிற்குள்ளும் செல்ல முடியாமல், மதுபாலாவையும் சமாதானப்படுத்த முடியாமல், போலீசார் திணறி போனார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் 2 நாட்களாக மருமகளையும், போலீசாரையும் வீட்டிற்குள்ளே வரவிடாமல், மிரட்டி கொண்டிருந்த மாமியாருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.. வலியால் கதறி உள்ளார்.

Where is Madhubalas child and What did the mother-in-law do to the young woman near Mangadu chennai

108 ஆம்புலன்ஸ்: இதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு அவரே தகவல் சொல்லி உள்ளார்.. கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ல் ஊழியர்கள் வந்துவிட்டனர்.. அதனால், வேறுவழியின்றி கதவை திறக்கும்படி ஆகிவிட்டது.. ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வீட்டிற்குள் நுழைந்து, மாமியாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்த பிறகு அவர் கதவை திறந்ததால் அந்த நேரத்தில் போலீசாருடன் மதுமாலாவும் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போதுதான் இன்னொரு அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.. வீட்டிற்குள் அவரது குழந்தையை காணோம்..

2 நாட்களாகவே வாசற்படியிலேயே உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்த நிலையில், வீட்டிற்குள் குழந்தை இல்லை என்ற விஷயமே அவருக்கு தெரியவில்லை.. அப்படியானால் குழந்தை எங்கே போயிருக்கும்? என்று குழப்பம் அடைந்தார்.. வாசற்படியிலேயே உட்கார்ந்திருந்தால், வேறு யாருமே அந்த நேரத்தில் வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ செல்லவில்லை. ஒருவேளை, மொட்டை மாடி வழியாக, அக்கம்பக்கத்து வீடுகள் வழியாக குழந்தையை யாருடனாவது மாமியார் அனுப்பி வைத்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்...

கண்ணீர் போராட்டம்: இப்போது விஷயம் என்னவென்றால், கதவை பூட்ட விடாமல், மதுமாலா தொடர்ந்து அதே இடத்திலேயே கண்ணீருடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மாங்காடு போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்... நெஞ்சுவலி என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள, மாமியார் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+