"நெளிந்த" எடப்பாடி.. திடீர்னு மாறிய "கிளைமேட்".. என்ன இருந்தாலும் "லீடர்" ஆச்சே.. காரணமே மோடிதான்

எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தது குறித்த விவாதம் நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சந்தித்து பேசியது குறித்த பரபரப்புகள் இன்னும் குறையவில்லை.. இது தொடர்பான விவாதங்களும், சலசலப்புகளும் இன்னும் அடங்கவுமில்லை.

என்ன இருந்தாலும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. அவர் மற்ற அமைச்சர்களுடன் வரிசையில் நின்று, பிரதமரை சந்திக்க வேண்டுமா? அந்த பதவிக்கென்று தனி மரியாதை உள்ளதே என்ற ஆதங்க குரல்கள் கிளம்பி உள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது, கிட்டத்தட்ட கேபினட் அந்தஸ்து உள்ள பதவியாகும்.. அதனால்தான், அன்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் மிகப்பெரிய விவாதமும், சர்ச்சைகளும், குழப்பங்களும் வெடித்தன..

 பண்ணை வீடு

பண்ணை வீடு

தேனியில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டுக்கு, ஓபிஎஸ் கோபித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டதையும், அவரை சமாதானப்படுத்த இங்கிருந்து சில தலைவர்கள் தேனிக்கு சென்றதையும் தமிழகமே வேடிக்கை பார்த்தது. இறுதியில், சாதுர்யர்த்தாலும், கொங்கு மண்டலத்தை வளைத்து பிடித்து மெஜாரிட்டி காட்டியதாலும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார்.. இந்த அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை போராடி பெற்றும்கூட, நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக சொல்லி கொண்டிருப்பது வேறு விஷயம்.

தலைவாசல்

தலைவாசல்

ஆனால், அப்படிப்பட்ட வலுவான எதிர்க்கட்சி தலைவரை, நேற்றையதினம் பத்தோடு பதினொன்றாக பிரதமர் சந்தித்து பேசியது, சிலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.. என்ன இருந்தாலும் பாரத பிரதமர் நல்ல மனிதர்தான், உயர்ந்த மனிதரும்கூட. ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சித்தலைவரை பத்தோடு பதினொன்றாக சந்தித்தது தவறுதானே? மதியாதார் தலைவாசல் எடப்பாடியார் மிதிப்பதும் அவசியமில்லையே? என்று சில ஆதங்க கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன.

மீட்டிங்குகள்

மீட்டிங்குகள்

அதேசமயம், இது இருவேறு விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.. ஒரு சாதாரண நிகழ்வை, அரசியலாக்கக்கூடாது, பிரதமர் மதுரை வந்தது, வேறு நிகழ்ச்சிக்காக.. மரியாதை நிமித்தமாக தமிழக தலைவர்களை சந்திக்க நேரிடும்போது, இப்படித்தான் ஏற்படும்.. மேலும் பிரதமருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் கூட இப்படி அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்திருக்கலாம்.. யதேச்சையாக நிகழ்வதை, பெரிதுபடுத்த தேவையில்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
25 + 20

25 + 20

மற்றொரு சாராரோ வேறு மாதிரியான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.. இப்படி பத்தோடு பதினொன்றாக நிற்க வைக்க காரணம், எடப்பாடியின் பிடிவாத குணம்தான்.. இந்த பிடிவாத குணத்தினால்தான், கடந்த சட்டசபை தேர்தலில் 20 முதல் 25 தொகுதி வரை தினகரன் அணியினால் இழக்க நேரிட்டது.. இந்த முறையும் அதே தவறை எடப்பாடி செய்ய பார்க்கிறார்.. அதிமுக ஒன்றாக இல்லாவிட்டால், இந்தமுறையும் தினகரன் தான் வாக்குகளை பிரிப்பார், இன்னொரு பக்கம் ஓபிஎஸ் பிரிப்பார்.. இது எடப்பாடிக்குதான் சறுக்கல்.. அந்தவகையில் மேலிடம் இப்படித்தான் பொத்தாம் பொதுவாக நடத்தும் என்று கூறுகிறார்கள்.

வேறவழி

வேறவழி

இப்படி வேறு வேறு கருத்துக்கள் இணையத்தை ரவுண்டு கட்டினாலும், ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு கவனிக்க உள்ளது.. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவையில், ஓபிஎஸ் பக்கத்திலேயே உட்கார நேரிடும் என்பதால், சபையை புறக்கணித்தவர் எடப்பாடி பழனிசாமி.. வழக்கமாக, எதிர்கட்சி தலைவர் இருக்கைக்கு அருகாமையில் இருக்கும் எதிர்கட்சி துணைதலைவர் நாற்காலியும் போடப்பட்டிருக்கும்.. இந்த தர்மசங்கடத்தை தவிர்க்க முதல்நாள் பேரவைக்கு வராமலேயே இருந்ததாக சொல்லப்பட்டது. மறுநாள் வேறு வழியில்லாமல், எடப்பாடி பழனிச்சாமி. அங்கே ஓபிஎஸ் அருகில் போடப்பட்டிருந்த, எதிர்க்கட்சி துணை தலைவர் சீட்டில் வந்து உட்கார்ந்தார்..

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்து மாதக்கணக்கில் ஆகிறது.. இந்த 4 மாத காலத்தில் எத்தனையோ கட்சி நிகழ்வுகள், கூட்டங்கள், விழாக்கள் நடந்தன.. ஆனால், இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காமல் அவைகளை தவிர்த்தே வந்தனர். பிரதமர் மோடி சென்னை வந்தபோதுகூட, தனித்தனியாகத்தான் சந்தித்து பேசினர்.. ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கேட்டு திரௌபதி வந்தபோதும், தனித்தனியாகவே சந்தித்து ஆதரவு தந்தனர்.. பொதுநிகழ்வுகளையும், கட்சி நிகழ்வுகளையும் தங்களுக்கு வசதியாக இரு தரப்புமே தவிர்த்து வந்த நிலையில், சட்டசபை நிகழ்வில் அப்படி செய்ய முடியாது.. எங்கே சீட் போடப்பட்டுள்ளதோ, அங்குதான் அமர வேண்டும் என்பது சட்டசபை விதி..

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

அதன்படி, அன்றைய தினம் ஓபிஎஸ் + எடப்பாடியும் நெளிந்தபடியே உட்கார்ந்திருந்தனர்.. அடுத்த நிமிடமே சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட எடப்பாடி ஆரம்பித்துவிட்டாலும், இவர்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்தது ஒருசில நிமிடங்களே இருந்தன.. இந்த அளவுக்கு எடப்பாடியை சங்கடத்தில் ஆழ்த்திய நிகழ்வை, நேற்றைய தினம் பிரதமர் மோடி அசால்ட்டாக செய்துவிட்டார்.. பிரதமரை சந்தித்தாக வேண்டிய நெருக்கடிதான், ஓபிஎஸ்ஸுடன் எடப்பாடியை ஒன்றாக அருகருகே நிற்க வைக்கும்படியான சூழலை உருவாக்கி உள்ளது..

தயவு

தயவு

அதேசமயம், பாஜகவை முற்றிலுமாக தவிர்த்துவிடவோ, எதிர்த்துவிடும் மனநிலைமையிலோ எடப்பாடி பழனிசாமி இல்லை. இரட்டை இலை சின்னம் மட்டுமல்லாமல், பல்வேறு நெருக்கடிகளில் சிக்க உள்ளதால்தான், பாஜக மேலிடத்தின் தயவு எடப்பாடிக்கு தேவையாக இருந்து வருகிறது.. கடந்த முறையே டெல்லி சென்று, சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காத நிலையில், இந்த முறையாவது பிரதமரை சந்தித்து விட வேண்டும் என்ற நெருக்கடியும், பிரதமரை சந்திக்க தூண்டி விட்டது என்றே சொல்லலாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், வேறு வழியில்லாத நிலைமையில் எடப்பாடி உள்ளதாகவே தெரிகிறது.

நெளிந்த எடப்பாடி

நெளிந்த எடப்பாடி

அந்தவகையில்தான் நேற்றைய தினம் சந்திப்பு நடந்துள்ளது.. இதனால், ஓபிஎஸ்ஸுக்கு எந்தவிதமான சங்கடமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.. காரணம், அவர்தான் கட்சி இணைய வேண்டும் என்று அப்போதுமுதல் இப்போது வரை அழைப்பு விடுத்து காத்துக் கொண்டிருப்பவர்.. அதனால், இந்த சங்கடம் எடப்பாடிக்கு மட்டுமே இருந்து வந்துள்ளது.. மோடியின் ஒரே ஒரு கண்ணசைவு, எடப்பாடியின் மொத்த இறுக்கத்தையும், பிடிவாதத்தையும் தளர்த்திவிட்டது.. இதே தளர்வு, ஓபிஎஸ்ஸை அஇணைத்து கொள்வதிலும் இருந்தால், அந்த கட்சிக்கு நல்லது.. அந்த கட்சியின் ரத்தத்தின் ரத்தங்களும் நல்லது.. பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+