இறங்கிய பவுன்சர்கள்.. மாநாட்டில் கட்டுப்படுத்த முடியாத கூட்டம்.. விஜய் எங்கே தெரியுமா? போன மெசேஜ்
சென்னை: விக்கிரவாண்டியில் நடக்க உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தொடர்ந்து அந்த கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள். விக்கிரவாண்டி மாநாட்டுத் தளத்தில் திரளத் தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்வுகள் தொடர்பாக நடிகர் விஜய்க்கு அடுத்தடுத்து தகவல்கள் சென்ற வண்ணம் உள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது.

அங்கு நிறுத்தப்பட்டுள்ள கேரவனில் கடந்த இரண்டு நாட்களாக விஜய் மாநாட்டு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறார். அங்கே உள்ள கேரவனில்தான் விஜய் இருக்கிறார். மாநாடு நடக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து விஜய்க்கு அடிக்கடி மெசேஜ்கள் சென்ற வண்ணம் உள்ளன . குடிநீர், மருத்துவ சேவைகள் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் விஜய்க்கு தகவல் சென்றுள்ளது.
மாநாடு தொடங்குவது தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், மெரினா சம்பவத்தைப் போலவே, நிகழ்வு முடிந்ததும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பங்கேற்பாளர்களின் ஓட்டத்தை நிர்வகிக்க, முக்கிய சாலைக்கு ஒரே நேரத்தில் அணுகலை வழங்காமல் ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக வெளியேற செய்யும் வகையில் விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறாராம் . இது சம்பந்தமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடன் விஜய் தீவிரமாக ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.
கூட்டம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலுக்கு வர தொடங்கி உள்ளனர். இன்று மாலைதான் கூட்டம் நடக்கிறது. ஆனால் நேற்று இரவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்துள்ளனர். மக்கள் பலரும் அதிகாலையே குடும்பம் குடும்பமாக வந்தனர்.
பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு மக்கள் குடும்பமாக வர மாட்டார்கள். ஆனால் இந்த முறை விஜய்யின் முதல் மாநாட்டிற்கு விஜய்யை பார்க்க.. படம் பார்ப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முன் வரிசையில் அமர்வதற்கு மக்கள்.. இப்போதே மக்கள் பலர் வந்து அமர்ந்து உள்ளனர்.
இதனால் பலர் சேர்களை உடைத்துக்கொண்டு இப்போதே அமர தொடங்கி உள்ளனர். அங்கே வைக்கப்பட்டு இருந்த பேரிகேட்கள் கூட உடைக்கப்பட்டு உள்ளன. பலரும் இரவே வந்து இடம் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் தவெக மாநாட்டின் முகப்பு பகுதிக்கு எதிரேவுள்ள சாலையின் நடுவே அமைந்திருக்கும் சென்டர் மீடியனில் பலரும் அமர்ந்தனர்.
அங்கே பல வாகனங்கள் சென்றன. இதற்கு இடையே ஆபத்தான நிலையில் படுத்து உறங்கினர். இந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட உள்ளனர்.
மொத்தம் 18 மெடிக்கல் கேம்ப் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்புலன்சிலும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். மேலும் உடனடி சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications