ஒரு TVK தொண்டன் கூட கரூர் களத்தில் இல்ல! முதல்வர் பதவி மட்டும் வேண்டுமா? விஜய் மீது பாயும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு தொண்டர் கூட கரூரில் களத்தில் இல்லை என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் விஜய் பரப்புரையின் போது 39 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TVK Vijay

1. தவெக தொண்டர்கள் எங்கே?

தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு தொண்டர் கூட கரூரில் களத்தில் இல்லை என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நேற்று கரூரில் மக்கள் பலியான நேரத்தில் அங்கே மக்களை காக்க திமுக, அதிமுகவினர் கூடினர். கூட்டம் கூட்டமாக வந்து உதவிகளை செய்தனர். மனித சங்கிலி போட்டு மக்களை காப்பாற்றினார். வரிசையாக நின்று மக்களை அங்கிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு தொண்டர் கூட களத்தில் இல்லை. எங்களிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். எங்களிடம் தொண்டர்கள் இருக்கிறார்கள். நாங்கள்தான் எதிர்காலம் என்றெல்லாம் சொல்லும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு தொண்டர் கூட களத்தில் இல்லை. திமுகவை காலி செய்வோம் . அதிமுகவை காலி செய்வோம் என்றெல்லாம் மார் தட்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு நிர்வாகி கூட களத்தில் இல்லை.

பாஜக நிர்வாகிகள் கூட களத்தில் உள்ளனர். ஒரு தண்ணீர் கேன் கொடுக்க கூட தமிழக வெற்றிகழக தொண்டர்கள் களத்திற்கு வரவில்லை.


2. விஜய்க்கு முதல்வர் ஆசை

விஜய் கரூரில் மக்களை சந்திக்கவோ.. இரங்கல் தெரிவிக்கவோ.. தொண்டர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்யவோ நினைக்கவில்லை. ஆனால் அவசர அவசரமாக அவர் சென்னை விரைகிறார். இதற்காக அவர் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே செய்தியாளர்கள் விஜயிடம்.. சார்.. மக்கள் பலியாகி இருக்கிறார்கள் விஜய்.. பலர் செத்துட்டாங்க.. செய்தியாளர்களை பாருங்க.. எங்களிடம் பதில் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் விஜய் அவர்களை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றார். மக்கள் செத்துட்டாங்க விஜய்.. பதில் சொல்லாமல் போனால் என்ன நியாயம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். ஆனால் விஜய் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சென்னைக்கு சென்ற போது பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத விஜய், சம்பவம் நடந்து 4 மணி நேரத்திற்கு பின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டிருந்தார்.


3. இரண்டாம் கட்ட தலைவர்கள் வரவில்லை

கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த போது புஸ்ஸி ஆனந்த் விஜய் உடன் இருந்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் அவரும் விஜயுடன் அவசரமாக அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக அவர் இந்நேரம் அறிக்கை விட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த நொடி வரை அறிக்கை வெளியிடவில்லை.

அவர் இப்போது சென்னையில் உள்ளார். இன்று விஜயை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆதவ் அர்ஜுனா விஜயுடன் நேற்று இருந்தார். விஜயுடன் என்ன போஸ்ட் செய்ய வேண்டும்.. செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் ஆதவ் அர்ஜுனா.. தவெக கூட்டத்தில் மக்கள் இறந்ததற்கு 1 இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகி அருண் சென்னையில் இருக்கிறார். விஜயுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அவர்.. விஜய்க்கு முக்கியமான சில ஆலோசனைகளை இந்த விவகாரம் தொடர்பாக வழங்கி வருகிறார். ஆனால் யாருமே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+