இப்போ "அண்ணன்" என உருகும் விஜய்.. விஜயகாந்த் சிகிச்சையில் இருந்த போது பார்க்கவே இல்லையே.. கசப்பு
சென்னை: நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் விஜய் பல அரசியல் விஷயங்களை லேசாக டச் செய்து பேசினார். அவரின் பேச்சில் ஆழமில்லாமல் இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது. நேற்று பல விஷயங்களை பேசி விஜய் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்தும் பேசினார்.
விஜய் தனது பேச்சில், சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத்தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா.

விஜயகாந்த் பற்றி விஜய் பேச்சு
அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது.
என்னுடைய அண்ணன் புரட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா. தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள், இப்போ பாருங்க, என் கூட இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள், நான் வந்துவிட்டேன். அவர் வரவில்லை அதனால் நீங்கள் வர மாட்டீர்கள் என்றார்கள்.. இதோ வந்துவிட்டேன்., என்று விஜய் பேசி இருந்தார்.
விஜய் - விஜயகாந்த் உறவு
ஒரு காலத்தில் சினிமா உலகில் விஜய்க்கு எல்லாமுமாக இருந்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தின்தான் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக வரிசையாக விஜய்க்கு குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்தார். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் சேர்ந்து நடித்தார். விஜயின் தொடக்க காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தது என்னவோ விஜயகாந்த்தான்.
இந்த நிலையில்தான் விஜயகாந்த் இறந்த பின் அவரின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார். ஆனால் அவர் உயிருடன் இருந்த போது விஜய் போய் பார்க்கவே இல்லை. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த போது விஜய் போய் அவரை பார்க்கவே இல்லை. கடைசி வரை பார்க்காமால்.. விஜயகாந்த் இறந்த பின்பே விஜய் போய் பார்த்தார். விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் போது அவரை சந்திக்க விஜய் செல்லவே இல்லை.
இப்போது அண்ணன் என்று உருகும் விஜய்.. விஜயகாந்த் வாக்குகளை பெறவே இப்படி செய்கிறார்.. விஜயகாந்த் சிகிச்சையில் இருந்த போது ஏன் அவரை சென்று பார்க்கவில்லை என்று திமுகவினர், தேமுதிகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications