இந்த தொகுதிதான்.. களமிறங்குறோம்.. யோசிக்காத இடத்தில் கால் வைக்கும் விஜய்.. பக்காவான திட்டம்
சென்னை: நடிகர் விஜய் லோக்சபா தேர்தலுக்கு பின்பாக தமிழக வெற்றி கழகம் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளாராம். முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் முடிந்ததும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளாராம். அதன்பின் அவர் தான் போட்டியிட போகும் தொகுதியில் இரண்டாம் பொதுக்கூட்டத்தை நடத்துவாராம். அதை தொடர்ந்து 2 வருட நீண்ட தேர்தல் பணிகளை அவர் நடத்த உள்ளாராம்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்கூட்டம்: நடிகர் விஜய் லோக்சபா தேர்தலுக்கு பின்பாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளாராம். இந்த பொதுக்கூட்டம் நடத்தும் இடம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி அவர் மதுரை அல்லது கோவை இரண்டு இடங்களில் ஒன்றில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளாராம். 2024 லோக்சபா தேர்தல் முடிந்து பெரும்பாலும் மே கடைசி வாரம் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.
இதில் விஜயின் கட்சி கொள்கைகள், விஜய் தலைவரா, பொதுச்செயலாளரா ? கட்சி சின்னம், கொடி கலர் எல்லாம் முறையாக வெளியிடப்படும். கட்சி நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்படுவார்கள். அதோடு கட்சியின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது .,
எங்கே போட்டி : யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் தென் மண்டலத்தில் போட்டியிட உள்ளாராம். முக்கியமாக திருச்சி அல்லது நெல்லையில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். இங்கே இருந்து எளிமையாக எம்எல்ஏ ஆகலாம் என்ற நம்பிக்கை காரணமாக அவர் நெல்லை அல்லது திருச்சியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா: இது தொடர்பாக தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒரு பக்கம் மத ரீதியான பிளவுகள் உள்ளன, இன்னொரு பக்கம் ஜாதி ரீதியிலான பிளவுகள் உள்ளன. இதை எல்லாம் மாற்ற வேண்டும். அதோடு அடிப்படியாக சில விஷயங்களை கூட நாம் செய்வது இல்லை. ஊழல்களும் கூட அதிகரித்துவிட்டன. அமைச்சர் பிடிஆர் ஆடியோ கூட கேட்டோம். திமுக மீது என்று இல்லை. எல்லா தரப்பிலும்.. எல்லா கட்சி மீதும் ஊழல் புகார்கள் உள்ளன.
எங்களின் அறிவிப்பை சிலர் ஆதரிக்கிறார்கள். ஜெயக்குமார் போன்றோர் எதிர்க்கிறார்கள்., அதிமுக தரப்பில் பதற்றம் உள்ளது. அதிமுக எங்களை பார்த்து பயப்படுகிறது. சீமானும் கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் தரப்பிலும்.. நாம் தமிழர் கேம்பில் பதற்றம் நிலவுகிறது. எல்லோரும் அணுக கூடிய தலைவராக விஜய் இருப்பார். மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி ஒரு தலைவராக விஜய் இருப்பார்.
அடுத்த 2 வருடம் இதற்கான பணிகளை செய்வார். அடுத்த 2 வருடம் கட்சி எடுக்க போகும் நிலைப்பாடுகளில் விஜய் உறுதியாக இருப்பார். திருமாவளவன் விஜய்யின் வருகையை வரவேற்று உள்ளார். அதே சமயம் ஏன் 2024 லோக்சபா தேர்தலில் நிலைப்பாடு எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் யாருடைய வாக்கு வங்கியையும் கெடுக்க கூடாது. முக்கியமாக இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கியையும் கெடுக்க கூடாது. அல்லது திமுகவின் பி டீம் போல செயல்பட கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். 2024 எங்கள் இலக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம். 2026 தேர்தலில் நிற்போம். 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம். அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்துவிட்டார்., என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications