அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்..? வானிலை மையம் கூறியது இது தான்..!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் முதல் அந்தமான் கடற்பகுதி வரை மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உள் மாவட்டங்களை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம் பர் 15-ம் தேதியன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்வர் 16-ம் தேதியன்று நாகை, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் பதிவாக கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications