Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹை டென்ஷன்".. அந்த "சீக்ரெட்" வெளியிடுகிறாரா ஓபிஎஸ்.. ஆட்டம் இனிதான் ஆரம்பம்.. வெலவெலக்கும் அதிமுக

எடப்பாடி பழனிசாமிக்கு 2 வழிகளில் நெருக்கடியை ஓபிஎஸ் ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.. இதற்கு பக்கபலமாக இருந்து வரும் பண்ருட்டி ராமச்சந்திரனின் காய்நகர்த்தலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2 விதமான வியூகங்களை ஓபிஎஸ் இனி கையில் எடுக்கலாம் என்ற அனுமானங்கள் வட்டமடித்து வருகின்றன. என்னவாம்?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, ஓபிஎஸ்ஸின் வேகம் குறைந்து காணப்பட்டு வந்தது.. யாருக்கு தொண்டர்கள் உள்ளது என்பதை தீர்மானிக்கக்கூடியது தேர்தல் தான் என்றாலும், தற்சமயம், அதிமுக எடப்பாடி பக்கம் உள்ளதை மறுக்க முடியாது.

ஆனாலும், தன்னையே பதவியை விட்டு எடப்பாடி பழனிசாமி தூக்கியெறிந்துவிட்டட நிலையில், 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளை அடுத்தடுத்து நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓபிஎஸ் அதிர்ச்சியையே தந்துள்ளார்.

 பப்பு பப்பு வேகாது

பப்பு பப்பு வேகாது

என்ன "மணி" (Money)அடித்தாலும் பப்பு வேகாது... தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார்.. கட்சியை கபளிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது என்று முதல்முறையாக ஆவேசமாகவும், கோபமாகவும், கொந்தளித்த ஓபிஎஸ்ஸை, அதிமுக சற்று வியந்துதான் பார்த்தது. "கவிதையில் இடைச்செருகல்களை கற்றறிந்த புலவர்கள் அகற்றுவார்கள். அதைப்போல், அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்" என்று பண்ருட்டியார் பேசியது அதற்கு மேல் ஆச்சரியத்தை தந்துள்ளது.. காரணம், இதுவரை பெரிதாக வாய் திறந்து எடப்பாடி பழனிசாமி தரப்பை விமர்சிக்காமல் இருந்தார் பண்ருட்டியார்..

 இடைச்செருகல்கள்

இடைச்செருகல்கள்

எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்டபோதும்கூட, எதுவும் அவரை விமர்சிக்கவில்லை.. ஆனால் இபபோது, அதிமுகவில் உள்ள இடை செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசியிருப்பது, இந்த உச்சக்கட்ட பரபரப்பு நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்புகிறாராம்.. அதாவது, இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுத்தந்துவிட்டார்.. அப்படியானால் இருப்பது, "ஒருங்கிணைப்பாளர்" என்ற பதவி மட்டுமே.. எனவே, கட்சி இப்போதுவரை தங்களிடம்தான் உள்ளது" என்பதுதான் பண்ருட்டியாரின் பெருத்த நம்பிக்கையும், அரசியல் பார்வையுமாக உள்ளதாம்.

 ஃபர்ஸ்ட் வரிசை

ஃபர்ஸ்ட் வரிசை

ஆனால் விஷயம், "ஒருங்கிணைப்பாளர்" என்ற பதவி மட்டுமேயில்லை என்கிறார்கள் எடப்பாடி தரப்பில்.. பாஜகவின் முழுபிம்பமாகவே ஓபிஎஸ் மாறிவிட்டதால்தான், அவரை கட்சியில் இருந்து நீக்கும் அளவுக்கு சென்றதாக சொல்கிறார்கள்.. அதற்கேற்றவாறு, ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் விட்டுத்தந்து எங்கேயுமே பேசியது இல்லை.. சமீபத்தில் குஜராத் பதவியேற்பு விழாவில், பின்சீட்டில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்ஸை, முதல் வரிசையில் வந்து உட்கார சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டாராம் பிரதமர் மோடி.. அந்த அளவுக்கு ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளதுதான், எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை கூட்டி வருகிறது..

 தாமரையே தாமரையே

தாமரையே தாமரையே

ஏதாவது செய்து, எடப்பாடி பழனிசாமியுடன் தன்னை பாஜக இணைத்து விடும் என்று ஓபிஎஸ் மலைபோல் நம்பி உள்ளாராம்.. அப்படியே எடப்பாடி கைவிட்டாலும் பாஜக தன்னை கைவிடாது என்று உறுதியாக நம்புகிறாராம்.. தனக்கு சீட்டை ஒதுக்கி தாமரை சின்னத்தில் போட்டியிட செய்தாலும் அதற்கும் தயாராக ஓபிஎஸ் இருப்பதாகவே தெரிகிறது.. பாஜகவுடன் இணைந்து செயல்பட தயார் என்று மேலிடத்துக்கு கடிதம் மூலமும் தெரியப்படுத்திவிட்டார் ஓபிஎஸ்.. எவ்வளவுதான் பாஜக சப்போர்ட் தனக்கு இருந்தாலும், 2 விஷயங்களில் இப்போதுவரை ஓபிஎஸ் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்..

 சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

முதலாவதாக சட்டவிஷயங்களில் இழுத்தடிப்புகளை செய்வது, அதாவது, சின்னம் விஷயத்தில் முடிந்த அளவுக்கு, சட்டப்பூர்வமாக தாமதப்படுத்தியபடியே வருவதே, முக்கியமான காய்நகர்த்தலாக பார்க்கப்படுகிறது. சின்னம் விஷயத்தில் முடிவு எதுவும் தெரியாமல் ஏற்பட்டு வரும் இந்த தாமதம்தான் எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை தந்து வருகிறதாம், அடுத்ததாக, எடப்பாடி பழனிசாமி கடைசிவரை தங்களை கட்சிக்குள் இணைக்காவிட்டால், சில ரகசியங்களை வெளியிடவும் ஓபிஎஸ் தரப்பு முயலலாம் என்கிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த தகவல் ஒன்று கசிந்தது.. தனக்கு எதிராக கடுமையாக பேசிக்கொண்டேயிருந்தால், எடப்பாடிக்கு எதிராக அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தக்கூட தயங்க மாட்டேன் என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொன்னாராம் ஓபிஎஸ்.

 1 தர்மயுத்தம்

1 தர்மயுத்தம்

அது என்ன ரகசியம் என்பதை ஓபிஎஸ் தரப்பில் விசாரித்தபோது, "ஓபிஎஸ்சை தர்மயுத்தம் நடத்த சொன்னது யார்? எந்த சூழலில் அது சொல்லப்பட்டது? இதற்காக நடந்த ஆலோசனை என்ன? அந்த ஆலோசனை எங்கு நடந்தது? ஆலோசனையில் அவரிடம் என்னவெல்லாம் சொல்லப்பட்டது? அதன் பிறகு நடந்தது என்ன? என்கிற பல ரகசியங்கள் ஓபிஎஸ்சிடம் இருக்கிறது. நாகரீகம் கருதி அதையெல்லாம் அம்பலப்படுத்தாமல் இருக்கிறார். இனி, தேவைப்பட்டால் அதனை அம்பலப்படுத்துவார்" என்றார்கள். ஓபிஎஸ் அப்படி சொல்லியிருந்தாரே தவிர இதுவரை எந்த ரகசியத்தையும் எடப்பாடி தரப்பு குறித்து வெளியிடவில்லை என்றாலும், இனி அவரது அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறதோ தெரியவில்லை..

 அம்பலம்

அம்பலம்

அதேபோல, எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டல ஆதரவாளர்களுக்கும் வலைவிரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.. ஒருபக்கம் சின்னம் தொடர்பான விஷயத்தை சட்டப்பூர்வமாக தாமதப்படுத்தி, மறுபுறம் அவரது ஆதரவாளர்களுக்கும் தூண்டிலை போட்டு, அடுத்தடுத்த ஆட்டத்தை துவங்கி உள்ளார் ஓபிஎஸ்.. ஆக, நீதிமன்ற முடிவை வைத்து எடப்பாடி பழனிசாமியின் எதிர்கால அரசியல் நகர போகிறதா? அல்லது பாஜகவின் நிழலாகவே மாறிவிட்ட ஓபிஎஸ்ஸை முன்வைத்து மாற்றுபாதையை தேர்ந்தெடுக்க போகிறாரா? தெரியவில்லை பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+