4 தொகுதிகளில் விசிக வெற்றி நிச்சயம்.. ஆனால் ஆளூர் ஷா நவாஸுக்கு காத்திருக்கும் ஷாக்.. நக்கீரன் சர்வே
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக நக்கீரன் தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேர்தல் நடத்தப்பட்டது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவியது.
சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் சர்வே
அதன்படி நக்கீரன் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 172 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 22 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல 40 தொகுதிகளில் இழுபறி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எந்தெந்த தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது.

விசிக 4 தொகுதிகளில் வெல்லும்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தனித்தொகுதிகளும் 2 பொதுத்தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. அனைத்து விசிக வேட்பாளர்களும் பானை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்நிலையில் ஒரு பொதுத்தொகுதி மற்றும் 3 தனித் தொகுதி என மொத்தம் நான்கு தொகுதிகளில் விசிக வெல்லும் என நக்கீரன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகள்
திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி, அரக்கோணம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட கௌதம சன்னா ஆகியோர் வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வானூர் (தனி) - வன்னி அரசு, காட்டுமன்னார்கோவில்(தனி) - சிந்தனைச் செல்வன் தொகுதிகளிலும் விசிக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாகை தொகுதி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை என நக்கீரன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
மூன்று தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இரண்டு தொகுதிகளில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி தொகுதி போட்டியிட்ட முகமது நயீம். கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட முஹம்மது அபுபக்கர் ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என நக்கீரன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications