டாப் டூ பாட்டம்.. பேட்டிங்கில் செம மாஸ்... இந்த சீசனில் கர்ஜிக்கும் பேட்டிங் கொண்ட அணி எது தெரியுமா?
சென்னை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை எதிரணிகளுக்கு அச்சமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொடக்க வீரர்கள் முதல் 8ஆம் நிலையில் ஆடும் தீபக் சஹர் வரை அனைவரும் பேட்டிங் மூலம் ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்டவர்கள் என்பதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்திலேயே அனைத்து அணிகளும் தங்கள் அணிகளுக்கு தேவையான சிறந்த வீரர்களை ஏலத்தில் வாங்கியது.
குறிப்பாக ஆல் ரவுண்டர்களான சாம் கரண், கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பெரும் தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனர். இதன் மூலம் முக்கிய அணிகளில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் ஐபிஎல் போட்டிகள்
அதேபோல் ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியையும் பார்க்கும் போது ராஜஸ்தான் மற்றும் சென்னை அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதிலும் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் அனுபவமும், இளமையும் கலந்து வீரர்கள் சரிவர சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 7 போட்டிகளை விளையாட உள்ளதால், சென்னை மைதானத்திற்கு ஏற்ப வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்திற்கான வீரர்கள்
அதேபோல் வலதுகை மற்றும் இடதுகை பேட்ஸ்மேன்கல் சீரான வரிசையில் உள்ளதால், எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் வரிசையை தோனியால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோரே சென்னை அணியின் தொடக்க வீரர்களாக விளையாட உள்ளனர். இதில் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் பவர் ப்ளே ஓவர்களில் குறைந்தது 50 ரன்கள் அளவிற்கு எடுக்கக் கூடிய வீரர்கள். அதேபோல் இருவருமே ஸ்பின்னர்களை சிதறடிக்கும் திறமைக் கொண்டவர்கள்.

இடதுகை - வலதுகை பேட்டர்கள்
அதேபோல் 3ஆம் நிலையில் வரும் மொயின் அலி, எதிரணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்குவதற்காகவே சேர்க்கப்பட்டுள்ள வீரர். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அதிரடியை குறைக்க வேண்டாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் மொயின் அலிக்கு அறிவுறுத்தியுள்ளது. 4ஆம் நிலையில் ஆடும் ராயுடு சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை விளையாடுபவர். இவருக்கு பின் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, தோனி ஆகியோரும் தேவைக்கேற்ப அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடும் தன்மை கொண்டவர்கள்.

8 வீரர்கள் முழுமையான பேட்ஸ்மேன்
அதுமட்டுமல்லாமல் தீபக் சஹரும் அதிரடியான பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர். இதனால் சென்னை அணியின் 8ஆம் நிலையில் ஆடும் வீரர்கள் வரை பேட்டிங் வரிசை நீண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய வரவான பென் ஸ்டோக்ஸை, தோனி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் தொடக்க வீரர், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என்று பென் ஸ்டோக்ஸ் தேவைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளக் கூடிய வீரர்.

முறுக்கேறி வந்துள்ள தோனி
சேஸிங்கின் போது டார்கெட் பெரிதாக இருக்கும் பட்சத்தில் மொயின் அலி இடத்தில் கூட பென் ஸ்டோக்ஸ் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஜடேஜாவின் அதிரடி எப்படி வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதனிடையே தோனியும் தனது கடைசி ஐபிஎல் தொடருக்காக முறுக்கேறி வந்து நிற்பதால், ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணியின் பேட்டிங் வரிசை எதிரணிகளுக்கு அச்சத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications