கிறிஸ்டியன்தான்.. ஆனால் ஜீசஸ் மீதே நம்பிக்கை இல்லை! யார் இந்த "யெகோவா விட்னஸ்"? கேரளா பாம் ஷாக்
சென்னை: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
கிறிஸ்துவத்தில் ஒரு பிரிவான Jehovah's Witnesses குழுவின் கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Jehovah's Witnesses அல்லது யெகோவாவின் சாட்சிகள் ஒரு கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு ஆகும். ஆனால் இவர்கள் பரிசுத்த திரித்துவத்தில் (தந்தை, குமாரன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று சம நபர்களில் நம்பிக்கையற்றவர்கள். கிறிஸ்துவர்கள் பொதுவாக பரிசுத்த திரித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதாவது (தந்தை, குமாரன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்.

நம்ப மாட்டார்கள்: ஆனால் Jehovah's Witnesses இதை நம்ப மாட்டார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை "பரலோகத்தில் உள்ள கடவுளின் ராஜ்யத்தின் ராஜா" என்று நம்புகிறார்கள், ஆனால் இயேசுவை சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதாவது இயேசுவை கடவுளின் ராஜாங்கத்தில் ஒரு மன்னர் என்று நம்பிக்கை கொண்டவர்கள்.. ஆனால் அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் பைபிளின் உரையை மட்டுமே முழுமையாக நம்ப கூடியவர்கள் பைபிள் படி நடக்க கூடியவர்கள் என்றாலும் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். Jehovah's Witnesses பிரிவை சேர்ந்தவர் கள்கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர் கொண்டாடுவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற பண்டிகைகளை அவர்கள் நம்புவதில்லை. இவர்கள் இயேசுவை கடவுளாக கருதாமல் எல்லாவற்றையும் படைத்த ஒரே உண்மையான கடவுள் ஒருவரே. அவரின் பெயர் யெகோவா. அவரை வணங்கும் நபர்கள்தான் ஆபிரகாமும் மோசேயும் இயேசு என்ற மூவரும் என்று இவர்கள் நம்ப கூடியவர்கள். சிலுவையையோ மற்ற உருவங்களையோ இவர்கள் வணங்குவது இல்லை.
அவர்கள் எந்த விதமான வேறு நம்பிக்கை, வழிபாட்டையும் விரும்ப மாட்டார்கள். அதாவது தேசிய கீதம், தேசிய கொடியை வணங்குதல் போன்ற விஷயங்களை கூட இவர்கள் நம்ப மாட்டார்கள். கேரளாவில் ஏற்கனவே சில மாணவர்கள் இந்த Jehovah's Witnesses குடும்பத்தில் இருந்து வந்ததால் பள்ளியில் தேசிய கீதம் பாடாமல் அதற்காக தண்டிக்கப்பட்டனர்.
கோர்ட் கேஸ்: அது உயர்நீதிமன்றம் வரை சென்று கடைசியில் Jehovah's Witnesses குழுவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. கேரளாவில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் Jehovah's Witnesses குழுவில் உள்ளனர். தமிழ்நாட்டிலும் சென்னையில் 3000 - 5000 பேர் வரை Jehovah's Witnesses குழுவில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு: கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்ர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
Jehovah's Witnesses என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் நடத்திய ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நடத்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
படுகாயம்; இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 12 வயது சிறுமி பலியாகி உள்ளார். இதுதொடர்பாக கேரளா டிஜிபி ஷேக் தர்வேஷ் அளித்த பேட்டியில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதி ஆகி உள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை செய்து வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications