"கேம் சேஞ்ச்".. கோட்டையில் வேட்டையாடும் அந்த "ராஜா" யார்?.. லிஸ்ட்டில் 4 பேர்.. 23ம் தேதி கிளைமாக்ஸ்
சென்னை : சில தினங்களுக்குமுன்பு, சென்னை தீவுத்திடலில் ஜாக்டோ ஜியோ மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது, திமுக 6-வது முறையாக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் முக்கிய காரணம், உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நாள் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கையெழுத்து
கடந்த அதிமுக ஆட்சியில் நீங்கள் போராடியபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் அந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாமதமின்றி ஊதியம், அகவிலைப்படி உயர்வு கொடுத்துள்ளோம். இங்கு வரும்போதே உங்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளுக்கு கையெடுத்திட்டுவிட்டு தான் வந்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.. எனினும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் கோட்டையில் ஒரு தேர்தல் நடக்க போகிறது.

செக்ரட்டேரியேட்
தமிழக அரசின் நிர்வாக தலைமையகமாக இருப்பது தலைமைச் செயலகம். இங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் லிப்ட் ஆப்ரேட்டர் வரை சுமார் 10,000-த்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீங்கலாக, மற்ற பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகளின் நலன்களுக்காக இயங்குகிறது தலைமைச் செயலக சங்கம். அதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காகவே 'தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்' செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்சங்கத்திற்காக தேர்தல் நடத்தப்படுகிறது....

நெருக்கடிகள் - இக்கட்டுகள்
ஆனால், அதிகாரிகள் தவிர, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உதவியாளர்கள், உதவி பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள், கீழ்நிலை செயலர் என மொத்தம் 3 ஆயிரத்து 454 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாவர். அந்தவகையில், கொரோனா நெருக்கடிகள் இருந்ததால் கடந்த ஆண்டு இச்சங்கத்திற்கான தேர்தல் நடக்கவில்லை. இந்த நிலையில், சங்கத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்த நிலையில், வருகிற 23-ந்தேதி சங்கத்திற்கான தேர்தல் நடக்கிறது.

செக்ரட்டரி
சங்கத்தின் தற்போதைய தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் வின்னர்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது. இந்த அணியை எதிர்த்து டெபுடி செக்ரட்டரி வெங்கடேசன் தலைமையில் அகரம் அணியும், அண்டர் செக்ரட்டரி தமிழ்ஜோதி தலைமையில் டீம் அணியும், உதவி பிரிவு அலுவலர் கார்த்துக்கேயன் தலைமையில் அச்சீவர்ஸ் அணியும் போட்டியிடுகின்றன. வாக்குகளை பெற 4 அணிகளுமே முட்டி மோதுகின்றன.

4 டீம் + 4 பேர்
கடந்த காலங்களில் தாங்கள் செய்த நன்மைகளைச் சொல்லியும், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை எதையெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டியும் பரபரப்பாக வாக்குகளை சேகரித்து வருகிறது வின்னர்ஸ் அணி. பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இந்த கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி எந்த அணி பெற்றுத் தரும் என்கிற எதிர்பார்ப்புடன் இந்த தேர்தலை எடைப் போட்டு பார்க்கிறார்கள் தலைமைச் செயலக அலுவலர்கள். தலைமைச் செயலக சங்கத்தின் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறது தமிழக அரசு.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications