"Mr. ரவி கேட்டுச்சா?".. ஆளுநர் இல்ல, ஆர்எஸ்எஸ் ரவி.. பேசாமல் இதை செய்யலாம்.. திருமாவளவன் ஒரே போடு

திருமாவளவன், ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளுநர் ரவி குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ரவியின் சனாதன பேச்சுக்கு விசிக, கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது.. இதனால் தமிழக அரசியலே கொந்தளித்து காணப்படுகிறது.

சென்னை சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி கூறியிருந்த கருத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் அதற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் ஆர்எஸ்எஸ்ஸை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது... பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன...

 தேநீர் விருந்து

தேநீர் விருந்து

ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்று, கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன.. இதன் எதிரொலியாகத்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விசிக குரல் அன்றே எழுப்பியது.. ஒரு மாநிலத்தில் இந்த அளவுக்கு எதிர்ப்பும், கண்டமும் நிலவி வந்தபோதும், தேநீர் விருந்தையே அனைத்து கட்சிகளும் புறக்கணித்த போதும், ஆளுநர் தன் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தி கொள்ளவில்லை..

 சனாதனம்

சனாதனம்

மாறாக, அவரது பேச்சு முழுவதும் ஆர்எஸ்எஸ்ஸை உயர்த்தி பிடித்து வருவதாகவே, கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் 2 நாளைக்கு முன்பு சென்னை கூட்டத்தில் ஆளுநர் ரவி பேசியிருந்தபோது, "சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம்... மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம்.

 சனாதன தர்மம்

சனாதன தர்மம்

ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் சொல்கிறது.. அதுவே கடவுள்... ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.. ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை" என்று பேசியிருந்தார். ஒருமாநில ஆளுநரின் இந்த பேச்சு, பரவலான அரசியல் கட்சிகளையும் தாண்டி பொது மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

 ஆர்எஸ்எஸ் ரவி

ஆர்எஸ்எஸ் ரவி

இதற்குதான் திருமாவளவன் 2 நாட்களாகவே கண்டனம் தெரிவித்து வருகிறார்.. செய்தியாளர்களிடம் பேசும்போது, "நபிகள் நாயகத்தை பற்றி தவறாக பேசிய நுபுல் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்தால் மட்டுமே போராட்டம் நடக்காது... அவர்கள் மத வெறுப்பு அரசியலை திணிக்கிறார்கள்.. இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு எதிராக தான் மக்கள் போராடுகிறார்கள்.. சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.. ஆளுநர் 100 விழுக்காடு ஆர்எஸ்எஸ் ப்ராடக்ட்... ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை அவர்.. ஆளுநர் பேசுவது இந்த தேசத்திற்கு நல்லதல்ல.. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல" என்றார்.

 Mr.ரவி கேட்டுச்சா?

Mr.ரவி கேட்டுச்சா?

இன்றைய தினம் இன்னொரு கருத்தையும் திருமாவளவன் சொல்லி உள்ளார்.. "ஆளுநர் ஆர்என்ரவி, ஆர்எஸ்எஸ்ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. இதைதான் விசிக நிர்வாகிகளும் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, இதுகுறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு, "Mr.ரவி கேட்டுச்சா?" என்று திருமாவளவன் கோரிக்கையை பதிவிட்டுள்ளார்..

திருமாவளவன்

திருமாவளவன்

அதுமட்டுமல்ல, "பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி இந்திய உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் தனியாருக்கு விற்கப்படுகின்றன. சாதிய-மத வன்முறைகளும் கும்பல் படுகொலைகளும் நடத்தப்பட்டு, இந்தியாவை அச்சுறுத்துகிறது. இதற்கு பெயரே சனாதனம். இதையா விரும்புகிறீர்கள்?" என்று வன்னியரசு நறுக்கென இன்னொரு கேள்வியையும் ட்விட்டரில் எழுப்பி உள்ளார்.. திருமாவளவன் முன்வைத்துள்ள ஆளுநருக்கு எதிரான இந்த கோரிக்கையும், வன்னியரசு பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+