அந்த வாட்சை "கிப்ட்" பண்ணது யாரு? இவ்வளவு லட்சம் ரூபாயா? அண்ணாமலையை வசமாக வளைத்த திமுக.. போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை வைத்து இருக்கும் வாட்சை அவருக்கு பரிசாக வழங்கியது யார் என்று திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை எப்போதும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வார். ஆனால் தேர்தல் ஆணையத்தில் தனக்கான சொத்து மதிப்பில் அதிக அளவில் நிலங்கள், சில கோடி மதிப்பு கொண்ட சொத்துக்கள் இருப்பதாக இவர் கணக்கு காட்டி இருந்தார்.

இருந்தாலும் திமுகவினர் போல நான் பணக்காரன் கிடையாது என்று அண்ணாமலை பல இடங்களில், பல மேடைகளில் பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்து இருக்கும் வாட்ச் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ச்

வாட்ச்

பாஜக தலைவர் அண்ணாமலை கையில் ஒரு வாட்ச் வைத்து இருக்கிறார். அந்த வாட்சின் விலை 3.46 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது. இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை வாட்ச் வாங்கியது எப்படி. வாட்ச் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள், திமுகவினர் பலர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

பதிலடி

பதிலடி

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரப்பில் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும்.

பெருமை

பெருமை

இந்திய ராணுவத்தின் ரபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை ஓட்டும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதை வைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணியும் பாக்கியம் கிடைத்து உள்ளது. எனக்கு இது போதும். நான் தேசியவாதி அதனால் இந்த வாட்சை அணிகிறேன். இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள். உலகில் இது போல 500 வாட்ச்கள்தான் உள்ளது. இதில் என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில்.. அண்ணாமலை கட்டி இருக்கும் . ரபேல் வாட்ச்சும் அதிக விலை கொண்டதாக நெட்டிசன்கள் கூறி உள்ளனர். இவர் ரபேல் வாட்சையே கட்டி இருந்தால், அந்த வாட்ச் இவருக்கு கிடைத்தது எப்படி என்று கேட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி எழுப்பி உள்ள கேள்வியில், அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்.அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என்று கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+