யார் இந்த தி.நகர் சத்யா? எம்எல்ஏ ஆன சைக்கிள் கடை ஓனர்! மேலிட ‘நெருக்கம்’.. தலைநகரில் தனி சாம்ராஜ்யம்
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகியுள்ளார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா. ஒரே ஒருமுறை எம்.எல்.ஏவான தி.நகர் சத்யா சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி, ரெய்டுக்கு ஆளாகியுள்ளார். அரசியலில் தி.நகர் சத்தியாவின் வளர்ச்சியும் படபடவென மேலே வந்ததுதான்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 16 இடங்களிலும, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தியாகராய நகர் சத்தியா: தி.நகர் சத்யா கடந்த 2016 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த மனுவில், தனக்கு 2.77 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் சொத்துகளை மறைத்து மனுதாக்கல் செய்துள்ளதாக, பத்திரிகையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முகாந்திரம் இருந்தால், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா, வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை குறிவைத்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன் டைம் எம்.எல்.ஏ: அமலாக்கத்துறை, திமுக அமைச்சர்களை குறிவைத்து வரும் நிலையில், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவை குறிவைத்து சோதனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி உள்ளிட்ட பலரது வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சத்ய நாராயணன், சென்னை தி.நகரில் சைக்கிள் கடை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் அதிமுகவில் இணைந்த இவருக்கு, 1991-96 காலகட்டத்தில் செங்கோட்டையன் அறிமுகம் கிடைத்தது. பின்னர், கட்சியில் சேர்ந்து, அதிமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமாகி பகுதி செயலாளர் பதவி பெற்றார். கடந்த 2011ல் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். சென்னை மாநகராட்சியிலும், தி.நகர் ஏரியாவிலும் அதிகாரம் மிக்க நபராக வலம் வரத் தொடங்கினார்.
மேலிட தொடர்பு: முன்னர் மாவட்ட செயலாளராக இருந்த கலைராஜனுக்கும், ஆதி ராஜாராமுக்கும் இடையில் நடந்த சண்டையில், திடீரென கட்சிக்குள் நுழைந்து மாவட்டச் செயலாளரும் ஆனார் சத்யா. கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையின் தி.நகர் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு, எம்.எல்.ஏவாக உயர்ந்தார் தி.நகர் சத்தியா என்ற சத்தியநாராயணன். பொதுவாக, அமைச்சர்கள் மீதுதான் சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடரப்படும். ஆனால், இதுவரை அமைச்சராகவே இருந்திராத தி.நகர் சத்யா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டதே, கட்சியில் அவரது இடத்திற்குச் சாட்சி.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் மிகவும் நெருக்கமானவர் தி.நகர் சத்தியா. கட்சியில் பதவி கொடுக்க லட்சணக்கணக்கில் பணம் வாங்குவதாக தி.நகர் சத்தியா மீது புகார்கள் எழுந்தபோதும், தலைமை கண்டுகொள்ளாமல் இருந்ததே, மேலிடத்தில் அவருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதற்கு அத்தாட்சி.

ரொம்பவே தாராளம்: தலைநகர அதிமுகவில், தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் தி.நகர் சத்யா, எடப்பாடி பழனிசாமி மற்றும் சீனியர்களின் மனம் குளிர நடந்து கொள்பவர். அண்மையில் மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டுக்கு சென்னையில் இருந்து தனியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களை அழைத்துச் சென்றது அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர்தான்.
அதிமுக ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்த தி.நகர் சத்யா, ஏகப்பட்ட புகார்களுக்கு உள்ளானார். நில அபகரிப்பு, கமிஷன் என ஏகப்பட்ட புகார்கள் வந்தன. ஆனாலும், மீண்டும் 2021ல் போட்டியிட சீட் பெற்றார். இந்த தேர்தலிலும் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றியைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications