ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்?
சென்னை: மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் அன்புமணி. மிக இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சரான அன்புமணி ராமதாஸ், தற்போது பாமகவின் தலைவராக இருக்கிறார். தனது தந்தை ராமதாஸ் உடனான அதிகார மோதலுக்கு மத்தியில், கட்சியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ள அன்புமணி 3வது முறையாக ராஜ்யசபா எம்.பி ஆகிறார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்.ஆர். இளங்கோ, செல்வராசு, திருச்சி சிவா, கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி முடிவடைய உள்ளது.

இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இன்று அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
ராஜ்யசபா தேர்தல்
தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும். திமுகவை பொறுத்தவரை 4 மாநிலங்களவை இடங்களில் காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு தலா ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இரண்டு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடத்தில் அக்கட்சியின் சார்பாக தமிழகத்திலிருந்து கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் தேமுதிக தரப்பில் இன்று எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
பாமக சார்பில் அன்புமணி
அதிமுக சார்பில் தம்பிதுரை மீண்டும் களம் காண்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்திற்கு பாமக தலைவர் அன்புமணி, போட்டியிடுகிறார். மாற்று வேட்பாளராக சௌமியா அன்புமணியும் மனு தாக்கல் செய்கிறார்.
யார் இந்த அன்புமணி?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி. 12 ஆம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவராக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற அன்புமணி, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்ட்ரோடக்டரி மேக்ரோ எக்கனாமிக்ஸ் படித்தார்.
மருத்துவர் பட்டம் பெற்றவுடன் கிராமப்புற மக்களுக்காகத் தான் பணியாற்ற விரும்பி, திண்டிவனத்தை அடுத்த நல்லாளம் கூட்டு சாலையில் மருத்துவராகப் பணியாற்றினார். கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கினார்.
பசுமை தாயகம்
1999ஆம் ஆண்டில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார் அன்புமணி. பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுற்றுச்சூழல், நீர்வளப் பாதுகாப்பு, மனித உரிமை உரிமைப் பாதுகாப்பு தொடர்பான மாநாடுகளில் மருத்துவர் அன்புமணி கலந்து கொண்டார்.
மத்திய அமைச்சர்
2004 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சுகாதாரத் துறை கேபினட் அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார். இந்திய வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஏராளமான சாதனைகளை அவர் படைத்துள்ளார். அவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் புகையிலை ஒழிப்பு, போலியோ ஒழிப்பு ஆகியவற்றுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக விருதுகளை வென்றுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி
2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004, 2019 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2014ஆம் ஆண்டில் தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என தேர்தலில் போட்டியிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்தது.
பாமக தலைவர்
2006 ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக பொறுப்பு வகித்தார் அன்புமணி. 2022 ஆம் ஆண்டு பாமகவின் தலைவராகப் பொறுப்பேற்றார். தற்போது பாமக நிறுவனரும் தனது தந்தையுமான ராமதாஸ் உடன் அதிகாரப்போட்டி ஏற்பட்ட நிலையில், கட்சியையும், சின்னத்தையும் தனதாக்கியுள்ளார். அன்புமணி தலைமையிலான பாமக தற்போது அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது.
அதிமுக, பாமகவுக்கு இந்த முறை 1 ராஜ்யசபா சீட் வழங்கியுள்ள நிலையில், அந்த இடத்திற்கு அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் 3வது முறையாக ராஜ்யசபா எம்.பி ஆகிறார் அன்புமணி.
வருகை பதிவேடு சர்ச்சை
தருமபுரி தொகுதி எம்.பியாக செயல்பட்ட காலகட்டத்தில் மக்களவையில் அன்புமணியின் வருகைப்பதிவு என்பது வெறும் 45 சதவீதம் மட்டுமே. ஆனால் அப்போது மற்ற எம்.பிக்களின் தேசிய சராசரி என்பது 80 சதவீதம்.
அதன் பிறகு மாநிலங்களவை எம்.பியாக இருந்தபோது வெறும் 30 சதவீத வருகை பதிவேட்டிலேயே பதிவு செய்திருக்கிறார். இது தமிழகத்தின் மற்ற எம்.பிக்கள் உடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications