குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே
சென்னை: நடிகை குஷ்பு- சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவுக்கு திருமணம் நடைபெறும் நிலையில் மாப்பிள்ளை இன்னாரென்று தெரியும், ஆனால் அவரது பேக்கிரவுண்ட் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இதனால் சமூகவலைதளங்களில் பலரும் புது மாப்பிள்ளையை டிரோல் செய்து வருகிறார்கள். அதிலும் அந்த டிரோல்களை குஷ்பு கண்ணில் படும் வரை ஷேர் செய்ய வேண்டுமாம்.
கோயில் கட்டி கொண்டாடும் அளவுக்கு உச்ச நடிகையாக இருந்தவர் குஷ்பு. மும்பையை சேர்ந்த இவர், தனது 14 வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

முறைமாமன் என்ற படத்தை 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கினார். அந்த படத்தில் குஷ்பு நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு குஷ்பு தமிழ்நாட்டு மருமகள் ஆகிவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் குஷ்பு. இதை அவரே நிறைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையால் அவர் அனுபவித்த கொடுமைகளையும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சுந்தர் சி- குஷ்பு தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
அவந்திகா, லண்டனில் நடிப்புக் கலையை படித்தார். பின்னர் நகைக் கடை விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஆரம்பம் எனும் மலையாள படத்தில் அவந்திகா நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக போகிறது. இளைய மகளுக்கு இயக்குநராவதே லட்சியம்.
அனந்திதா, மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது டபுள் ஆக்குபன்சி எனும் படத்தை இயக்கியுள்ளார்.

குஷ்புவின் மூத்த மகள் குஷ்பு போலவும் இளைய மகள் சுந்தர் சி போலவும் இருப்பார்கள். ஆனால் உயரத்தில் இருவரும் தந்தை சுந்தர்சியை போல். இந்த நிலையில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை பெயர் ஷ்ரவன் சீனிவாசன், இருவரும் காதலித்தது போல் எந்த கிசுகிசுவும் வரவில்லை.
திடீரென நேற்று முதல் பத்திரிகையை பிரதமர் மோடிக்கு கொடுத்த புகைப்படத்தை பார்க்கும் போதுதான் அவரது மகளுக்கு திருமணம் என்பதே தெரியவந்தது. பெண், மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டுதான் பிரதமரை குஷ்பு பார்க்கச் சென்றார்.

மாப்பிள்ளையின் பெயர் மட்டும்தான் தெரியும். அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அவரது பேக்கிரவுண்ட்டும் புரியவில்லை. சினிமா பின்னணி கொண்டவரா, அரசியல் பிரபலமா, இல்லை மகளுடன் கூட படித்தவரா என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவரது தோற்றத்தை வைத்து பலரும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

குஷ்பு மாப்பிள்ளையின் முகம் அப்படி நாக சைதன்யா போல் இருக்கிறதாம். இதனால் நாகார்ஜுனா மீது பலருக்கும் "சந்தேகம்" எழுகிறது. இன்னும் சிலர் அவர் முகம் சைடில் பார்த்தால் தோனி போல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

பொதுவாக ஒரு பேச்சு வழக்கு உள்ளது... எங்கோயே பார்த்த மாதிரி இருக்கு, அவரு பேரு நல்ல பேருதான் தொண்டை வரை வருது, ஆனால் வெளியே வரலை... இப்படியெல்லாம் சொல்வோம். அது போல்தான் அவர் யாரு என்பது பரீட்சயமான முகம் போல் இருக்கிறது. ஆனால் யாரென்றுதான் தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications