நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் சிக்கிய ரூ170 கோடி- காண்ட்ராக்டரின் 'பிக்பாஸ்' யார்?: கமல்ஹாசன்
சென்னை: நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் ரூ170 கோடி கைப்பற்றபட்டதே..ஒப்பந்தக்காரர்களின் 'பிக்பாஸ்' யார்? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் மாவட்டங்களில் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சி என அடையாளப்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன்.

இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அரியலூரில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசனை கடுமையாக தாக்கினார்.

மேலும், கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்வைத்தும் விமர்சித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது என நேற்றே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமா சாடி ஒரு ட்விட்டர் பதிவு போட்டுள்ளார் கமல்ஹாசன். அதில், நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications