கெஜ்ரிவால் - நவீன் பட்நாயக்கை வீட்டுக்கு அனுப்பியவர்.. தமிழக பாஜக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டாவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜகவுக்கான பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஒடிசாவில் 24 ஆண்டு காலம் ஆட்சி செய்த முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் டெல்லியில் 10 ஆண்டு ஆட்சி செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியவர். மேலும் அசாமில் பாஜகவின் ஆட்சியை தக்க வைக்க உதவியர் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த பைஜெயந்த் பாண்டாவின் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

who-is-bjp-tamil-nadu-election-incharge-baijayant-panda-how-he-defeat-arvind-kejriwal-in-delhi-and

இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பைஜெயந்த் பாண்டா யார்?

இதில் பைஜெயந்த் பாண்டாவின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பைஜெயந்த் பாண்டா பாஜகவின் எம்பியாகவும், பாஜகவின் தேசிய துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர் அல்ல. பொறுமையாக நடந்து கொள்பவர். கட்சி தலைவர்களை பொறுமையாக அரவணைத்து செல்லும் பக்குவம் கொண்டவர்.

தற்போது அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே மனஸ்தாபம் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை சரியாக நிர்வகிக்கும் தலைவராக பாஜக மேலிடம் பைஜெயந்த் பாண்டாவை அடையாளம் கண்டுள்ளது. இதனால் தான் அவர் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குரு நவீன் பட்நாயக்கை வீழ்த்தியவர்

இவர் தனது அரசியல் பயணத்தை ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். 2000ல் ராஜ்யசபா எம்பியானார். 2009 வரை அந்த பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு அவர் 2009ம் ஆண்டில் ஒடிசாவின் கேந்தரபாரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018 ல் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி நவீன் பட்நாயக் அவரை சஸ்பெண்ட் செய்தார்.

இதையடுத்து அவர் 2019ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு பாஜகவின் தேசிய துணை தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024 லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் கேந்த்ரபாரா தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்பியானார் ஒடிசாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது.

குறிப்பாக ஒடிசாவின் கடற்கரை பிரதேசங்களான கட்டாக், ஜெகத்சிங்கபூர், ஜெய்ப்பூர், பத்ராகக் உள்ளிட்ட இடங்களில் பாஜகவுக்கு அதிக வாக்குகளை இவர் பெற்று கொடுத்தார். இதன்மூலமாக ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை அசைத்து பார்த்த பாஜகவுக்கு உதவிய ஒடிசா தலைவர்களில் பைஜெயந்த் பாண்டாவும் ஒருவர் ஆவார்.

கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியவர்

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா தான் செயல்பட்டார். டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த ஆம்ஆத்மி கட்சி மீதான எதிர்ப்பலைகளை சரியாக அறிந்து அதற்கேற்ப பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி தேடிதந்தார்.

இதன்மூலம் டெல்லியில் 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியதோடு, 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவை அரியணை ஏற்றினார். ஒடிசா, டெல்லி தேர்தலுக்கு முன்பாக பைஜெயந்த் பாண்டா அசாம் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அங்கும் அவர் வெற்றி கண்டார்.

அசாமில் வெற்றி தேடிதந்தவர்

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அசாமில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. சர்பானந்தா சேனாவால் முதல்வராக இருந்தார். 5 ஆண்டு ஆட்சியில் எதிர்ப்பு அலை வந்தது. இந்த வேளையில் தான் 2021 சட்டசபை தேர்தல் நெருங்கியது. இதையொட்டி 2020ம் ஆண்டில் அசாம் தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டார். எதிர்ப்பலையை சமாளிக்கும் வகையில் பிரசார வியூகங்கள் வகுத்து கொடுத்தார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்தது. ஹிமாந்த் பிஸ்வா சர்மா முதல்வரானார்.

இப்படி அசாமில் பாஜக 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது, ஒடிசாவில் 24 ஆண்டு நவீன் பட்நாயக்கின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது, டெல்லியில் 10 ஆண்டு ஆம்ஆத்மி ஆட்சிக்கு முடிவுரை எழுதி கெஜ்ரிவாலிடம் முதல்வர் பதவியை பறித்தது உள்ளிட்டவற்றில் பைஜெயந்த் பாண்டாவின் செயல்பாடு பாஜக மேலிடத்தை கவர்ந்தது. இந்நிலையில் தான் தற்போது அவர் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது சாணக்கிய தனம் தமிழகத்தில் எடுபடும் என்று பாஜக மேலிடம் நம்பி இந்த பொறுப்பை வழங்கி உள்ளது.

துணை பொறுப்பாளரின் பின்னணி

அதேபோல் தமிழக சட்டசபை தேர்தல் துணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய விமான போக்குவரத்து துறையின் இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். முரளிதர் மொஹோல் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை புனே மேயராக செயல்பட்டார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் புனே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்பியான உடனேயே மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பாஜகவில் வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராக முரளிதர் மொஹோல் அறியப்படும் நிலையில் அவருக்கு தமிழக சட்டசபை தேர்தல் துணை பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+