திமுக "பாண்டியம்மாள்" யாருன்னு பாருங்க.. அன்று நெஞ்சை பிடித்தபடி சாய்ந்து, இன்று அசந்துபோன அந்தியூர்
திமுக பாண்டியம்மாள் அந்தியூர் தேர்தலில் வெற்றி பெற்றார்
சென்னை: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் பாண்டியம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்து முடிந்தது.. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.
இதில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களும் கடந்த 2-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

குழப்பங்கள்
இதற்கு பிறகு, மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்து முடிந்தது.. ஆனாலும், பல்வேறு இடங்களில் நிறைய ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன.. எனவே, நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.. அந்த வகையில், 62 பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தலை அப்போது நடத்த முடியவில்லை.

தேர்தல் ஆணையம்
அந்த காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்குத்தான் இன்றைய தினம் மறைமுக தேர்தல் நடந்தது.. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியிலும் தேர்தல் நடந்தது.. கடந்த மாதம் 19-ம் தேதி இங்கு தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தபோது, பெரும்பான்மைக்கு தேவையான 10 இடங்களில் திமுக வெற்றி பெற்றுவிட்டதால், அக்கட்சியின் பாண்டியம்மாள் சேர்மேன் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிபிஎம்
ஆனால், கூட்டணி தலைமை, இந்த பதவியை சிபிஎம்முக்கு ஒதுக்கி அறிவித்துவிட்டதால், திமுக கவுன்சிலர்கள் அதிருப்திக்கு ஆளானார்கள்.. இந்த நேரத்தில், தலைவர் பதவிக்கு போட்டியிட ரெடியாக இருந்த பாண்டியம்மாளுக்கு திடீரென மாரடைப்பு வந்து மயங்கிவிழுந்துவிட்டார்.. உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையிலும், பிறகு கோவை தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டு பூரண குணமடைந்தார்.

மறைமுக தேர்தல்
இதையடுத்து, மார்ச் 4-ம் தேதி நடந்த பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. இதனால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா உத்தரவிட்டார். அந்த அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குதான் இன்று தேர்தல் நடந்தது.. கட்சி அறிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீதாவும், ஏற்கனவே போட்டியிட தயாராகி இருந்த திமுகவின் பாண்டியம்மாளும் போட்டியிட்டனர்..

பாண்டியம்மாள்
இதில், சிபிஎம் வேட்பாளர் கீதாவை யாரும் முன்மொழியவில்லை. இதையடுத்து, திமுகவின் பாண்டியம்மாள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்... ஏற்கனவே, நகர்ப்புற தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனையால், திமுகவினரை பதவி ராஜினாமா செய்ய சொல்லி, முதல்வர் கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபடியும் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது, எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications