திடீர்னு அரசியல் களத்தில் வந்து குதித்த அண்ணாமலை.. யார் இவர்.. பின்னணி என்ன?
சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் இருக்கும் சொக்கம்ப்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். கரூரில் 1984, ஜூன் 4ஆம் தேதி பிறந்தார்.
Recommended Video
கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் இருக்கும் உடுப்பியில் 2013ல் போலீஸ் எஸ்.பி. ஆக முதல் பணியை ஏற்றுக் கொண்டார். பின்னர் 2015, ஜனவரி 1ஆம் தேதி எஸ்பி ஆக உடுப்பியில் பதவி உயர்வு பெற்றார். பின்னர் டிசிபியாக பெங்களூருவில் பணியாற்றினார். இவர் தனது பதவியை 2019ல் ராஜினாமா செய்தார்.

விஜயகுமார்
முன்னதாக மும்பையில் 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதுதான் தனக்குள் ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக தெரிவித்து இருந்தார். மேலும், லக்னோவில் பணியில் இருக்கும்போது, அங்கு இருக்கும் மக்களுக்கு தேவை குறைவு என்றும், தங்களுக்கு வேண்டியதை கேட்டு வாங்கும் மனப்பக்குவம் இல்லாமல் இருந்தனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்தான் தனக்கு ரோல் மாடல் என்று ஒருமுறை தெரிவித்து இருந்தார்.

மாணவர்களிடம் கட்டுப்பாடு
உடுப்பியில் பணியில் இருந்தபோது, கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். கல்லூரி மாணவர்களுடன் அடிக்கடி உரையாடி அவர்களது கருத்துக்களை அறிந்து வந்தார். குறிப்பாக மணிப்பாலில் பணியில் இருந்தபோது, இரவு நேரங்களில் மாணவர்கள் நடமாட்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வந்து குற்றங்களை குறைத்தார். இரவு 11:30 மணிக்கு மேல் பார் மற்றும் உணவு விடுதிகள் திறந்து வைத்து இருக்கக் கூடாது என்று கடுமையான விதிகளைக் கொண்டு வந்தார். இரவு நேரத்தில் போலீசாரின் பிடியில் மாணவர்கள் சிக்கினால், ஏன், எதற்காக இரவு நேரங்களில் வெளியே வந்தார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் போன்ற கட்டாய முறைகள் அமலுக்கு கொண்டு வந்து இருந்தார்.

அமைதிக் குழு
உடுப்பி மாவட்டத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு சிக்மகளூரு மாவட்டத்தின் எஸ்பியாக பாவி உயர்வு பெற்றபோது பெரிய அளவில் கிரிமினல்களை ஒடுக்கி இருந்தார். பாபா புத்தாங்கிரி சம்பவத்தை திறமையான முறையில் கையாண்டு இருந்தார். பாபா புத்தாங்கிரியை இந்து முஸ்லிம்கள் இருவரும் வழிபட்டு வந்தனர். இங்கு ஏற்பட்ட கலவரத்தை திறமையாக ஒடுக்கியதுடன், அவர்களுக்குள் இணைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைதிக் குழு ஒன்றும் ஏற்படுத்தி இருந்தார்.

பறந்த ஆர்டர்
2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா இருந்தபோது, ரமணகரா மாவட்டத்தின் எஸ்பி ஆக பதவியேற்குமாறு ஆர்டர் பிறந்தது. எடியூரப்பா பதவியேற்ற சில மணி நேரங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இரண்டே நாட்களில் பெங்களூருவுக்கு (தெற்கு) டிசிபி ஆக மாற்றப்பட்டார். பின்னர் 2019ல் தனது பணியை ராஜினாமா செய்தார். தற்போது கரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவி வருகிறார்.

நரேந்திர மோடி
சிக்மகளூருவில் இவர் பணியில் இருந்தபோது சிடி ரவி என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் பற்று ஏற்பட்டது. தனக்கு பிடித்த தலைவர் நரேந்திர மோடி என்று பலமுறை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications