சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் அதிரடி! யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர் இதுவரை கையில் எடுத்த முக்கிய வழக்குகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரை அனைவரையும் மாற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தமிழகத்தின் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.

Mahesh Kumar Aggarwal

அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மகேஷ்குமார் யார் என்பதை பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். இவர் 22 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தார். 1994 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ 5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இவர் தலைமையிலான சிபிசிஐடிதான் கொள்ளையர்களை கைது செய்தது.

இவர் தேனி மாவட்ட எஸ்பி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து பிரிவு துணை ஆணையர், சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, மதுரை ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், டிஜிபி அலுவலகத்தில் செயலாக்க பிரிவு ஏடிஜிபி, கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி, சென்னை காவல் துறை ஆணையர், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை மகேஷ் குமார் வகித்துள்ளார்.

மேலும் இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு, சென்னை பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை போன்ற வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தியவர் மகேஷ்குமார். சிறுச்சேரி அருகே உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய வந்த உமா மகேஸ்வரி அன்று இரவு அந்த நிறுவன நுழைவுவாயிலில் இருந்து எந்த பக்கம் போனார் என்ற சிசிடிவி காட்சியை போலீஸார் ஆய்வு செய்தனர். அது போன்றதொரு சீன் தெறி படத்திலும் விஜய் நடித்திருப்பார்.

தமிழக டிஜிபியின் முக்கிய பொறுப்புகள் பின்வருமாறு:

மாநிலம் முழுவதும் அமைதியைப் பேணுவது டிஜிபியின் முதன்மைப் பொறுப்பாகும். போராட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் விவிஐபி (VVIP) வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர் மேற்பார்வையிடுகிறார். ஏதேனும் ஒரு பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதைத் தணிக்கத் தேவையான கூடுதல் படைகளை (எ.கா. TSP - தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) அனுப்பும் அதிகாரம் இவருக்கு உண்டு.

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் பிரிவுகளையும் (சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உளவுத்துறை போன்றவை) இவர் வழிநடத்துகிறார்.

காவல்துறையினரின் இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றில் முக்கிய முடிவுகளை எடுப்பார். ஆயுதப் படைகள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பார்.

காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த இவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அல்லது சமூகக் காவல் திட்டங்கள் மற்றும் காவல் துறையின் மீதான மக்களின் புகார்களை விசாரிக்கும் அமைப்புகளை இவர் மேற்பார்வையிடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+