"உங்க வூட்டு ஆம்பளைய அடிப்பியா?".. செந்தில் பாலாஜிக்காக சீறிய கவிதா கணேசன்.. விக்கித்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர், கோவை என்று தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமும், சென்னையில் கிரீன் வேஸ் சாலையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் ரெய்டு காரணமாக பரபரப்பில் மூழ்கி உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரிய ரெய்டுகளில் ஒன்றாக செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு பார்க்கப்படுகிறது. மொத்தம் 1000 அதிகாரிகள் இந்த ரெய்டில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

 Who is Kavitha Ganesan, Who fought with Income tax officials against the raid at Minister Senthil Balaji premises?

முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் ரெய்டு நடப்பதற்கான காரணத்தை இன்னும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

ரெய்டு காரணம் என்ன? : போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆனாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டிற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

ரெய்டு மோதல்:

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சோதனை செய்ய சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Who is Kavitha Ganesan, Who fought with Income tax officials against the raid at Minister Senthil Balaji premises?

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள் அவர்களிடம் ஐடி கார்ட் கேட்டு விவாதம் செய்துள்ளனர். இதில் ஒரு அதிகாரி கோபம் அடைந்து திமுக தொண்டர்களை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. திமுக தொண்டர்களில் ஒருவரை பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது

இதையடுத்து அங்கு திமுக நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இந்த எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். செந்தில் பாலாஜி வீட்டிற்கு வெளியே வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அதிகாரிகள் பாதுகாப்பு கருதி கரூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கே இவர்கள் போலீசில் புகாரும் அளித்துள்ளனர். முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து.. உன் ஐடி கார்ட் காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனா அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பளைய இப்படித்தான் அடிப்பியா, என்று கேட்டுள்ளார் கவிதா கணேசன். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+