கே.ராஜன் மகன் இவர்தான்.. இயக்குநராக வெற்றி பெற்றவர்.. சபதம் போட்டு 15 ஆண்டுகள் பிரிந்திருந்தாராம்!
சென்னை: நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று பரவலாக அறிப்பட்ட கே.ராஜன், இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கே.ராஜனின் மகன் கே.ஆர்.பிரபு, 'LKG' படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர். முன்னதாக, பிரபுகாந்த் என்ற பெயரில் நடிகராகவும் நடித்துள்ளார்.
கே.ஆர்.பிரபு சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், தனது சொந்த உழைப்பாலும் திறமையாலும் தமிழ் சினிமாவில் இயக்குநராக முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுகாந்த்
தயாரிப்பாளர் கே.ராகே.ராஜன், தனது மகன் பிரபுகாந்தை 2000 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார். 'அவள் பாவம்' (2000) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் பிரபுகாந்த். மேலும், பிரபுதேவா நடித்த 'டபுள்ஸ்' (2000) திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து 'நினைக்காத நாளில்லை' (2001) உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
தனது தந்தை கே.ராஜன் இயக்கிய 'உணர்ச்சிகள்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகவும், திரைத்துறை சார்ந்த மற்ற பணிகளிலும் ஈடுபட்டு சினிமா தயாரிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பின்னர், முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
இயக்குநர் கே.ஆர்.பிரபு
நடிப்பைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற 'LKG' திரைப்படத்தின் மூலம் கே.ஆர்.பிரபு என்ற பெயரில் இயக்குநராகவும் அறிமுகமானார். ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்தீஷ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அரசியல் நையாண்டி திரைப்படமாக வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.. அறிமுக இயக்குநராக இருந்தாலும், சமகால அரசியலை மிக நுணுக்கமாகவும் நகைச்சுவையாகவும் கையாண்டு ஒட்டுமொத்தத் திரையுலகின் பாராட்டுகளையும் பெற்றார் கே.ஆர்.பிரபு.
கே.ராஜன் பெருமையாக
சினிமாவில் தனியாக ஒரு படத்தை இயக்கி வெற்றிபெற்ற பிறகே குடும்பத்தினரைச் சந்திப்பேன் என்று சபதம் எடுத்துப் பிரிந்திருந்தார், கே.ஆர்.பிரபு. 15 ஆண்டு பிரிந்திருந்து 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி மூலம் குடும்பத்துடன் சேர்ந்தார்.
'LKG' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குக் பிறகு, கே.ராஜன் தனது மகனின் வெற்றியை மேடைகளிலும் நேர்காணல்களிலும் மிகவும் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார். தந்தை-மகன் இருவருக்குள்ளும் இருந்த திரைத்துறை ரீதியான பிணைப்பும், குடும்பத்தின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பும் அப்போது ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
குடும்பத்தில் சபதம்
சினிமாவில் தனியாக ஒரு படத்தை இயக்கி வெற்றிபெற்ற பிறகே குடும்பத்தினரைச் சந்திப்பேன் என்று சபதம் எடுத்துப் பிரிந்திருந்தார், கே.ஆர்.பிரபு. 15 ஆண்டு பிரிந்திருந்து 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி மூலம் குடும்பத்துடன் சேர்ந்தார்.
இந்நிலையில், கே.ராஜன் இன்று அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்த கே.ராஜன் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications