பிடிஆரின் "ரைட் ஹேண்ட்".. இனிமே ஸ்டாலினுக்கு "இவர்தான்" மாஸ்டர்மைண்ட்.. யார் இந்த முருகானந்தம்?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முடிந்துள்ள நிலையில் நேற்று டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு முருகானந்தம் தேர்வாகி உள்ளார். யார் இந்த முருகானந்தம்?
தமிழ்நாட்டில் நேற்று நிதி துறைக்கும், சுகாதாரத்துறை துறைக்கும் புதிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அங்கே மொத்தமாக புதிய டீம் களமிறக்கப்பட உள்ளது. நிதி துறைக்கு உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

உதயசந்திரன் முதல்வருக்கு மிகவும் நெருக்கம். முதல்வரின் தனி செயலாளராக இருந்தார். அந்த டீமில் இருந்த 5 பேரில் இவர்தான் நம்பர் ஒன். அதிகாரிகள் முதல்வரை பார்க்க கூட உதய சந்திரன் அனுமதி தேவைப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் கட்டுப்பாடுகள் காரணமாக சில அமைச்சர்களும் அதிருப்தியில் இருந்தனராம் . சில சமயங்களில் இவர் செயல்படும் விதம் கட்சியின் டாப் தலைவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக கூறப்படுகிறது.
இவர்தான் முதல்வரின் நம்பர் 1 முதன்மை செயலாளர் என்பதால் பல்வேறு விஷயங்களை ஆட்சி ரீதியாக இவர்தான் "கண்ட்ரோல்" செய்து வருகிறார். இவர்தான் முதல்வரின் டேஷ் போர்டை கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் உதயசந்திரன் தற்போது நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்துள்ளனர். உதயசந்திரன் இனி அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சேர்ந்து செயல்படுவார்.
கூடுதல் தலைமை செயலாளர் அதிகாரத்தில் உள்ள முருகானந்தம் இந்த இடத்திற்கு முதல்வரின் புதிய மாஸ்டார்மைண்டாக வந்துள்ளார்.
யார் இவர்?
முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார்.
அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார்.
கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட்.
பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.
பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆகி உள்ளார். தலைமை செயலாளர் ஆக வேண்டியவர். கூடுதல் தலைமை செயலாளர் ரேங்கில் இருப்பவர் தற்போது தனி செயலாளர் ஆகி உள்ளார்.
அமைச்சரவை
அமைச்சரவை மாற்றத்தோடு சேர்ந்து இந்த அதிகாரிகள் மாற்றம் நடந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஐஏஎஸ்:
அமைச்சரவை மாற்றத்தின் போதே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் இருக்கும் என்று ஒன்இந்தியா தமிழ் சார்பாக முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன்படியே தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முடிந்துள்ள நிலையில் டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications