நான் அந்த கட்சிக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. கரெப்ஷன் கபடதாரிகளும்தான்.. ட்விஸ்ட் வைத்த விஜய்
சென்னை: நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும். என்று நடிகர் விஜய் பேசி உள்ளார் .
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், இறங்கியாச்சு. இனி எதைப்பத்தியும் யோசிக்க கூடாது. நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம். ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்ய போறோம். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.

தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.
முகமுடி போட்ட கரப்சன் கபடிதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது. பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக.
ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அத கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய்.
அரசியலில் வந்துவிட்டோம்.. சீரியாஸாக பேச வேண்டும்.. அப்படியே பேசிக்கொண்டே பார்மெட்டை மறந்துட்டேன்.. இப்போ சொல்லுறேன்.. என் ஆனந்த் அவர்களே.. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவர்களே.. என்னங்க இது அவர்களே இவர்களே எல்லாம்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை அறிவித்து விட்டு எல்லாரையும் ஏன் பிரிச்சு பார்க்கனும்.. நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன்.
அரசியலில் வளவளவென்று பேச கூடாது. புள்ளி விவர புலியாக புள்ளி விவரங்களை அடுக்கி உள்ளோம். இங்க நீ வேற நான் வேற இல்ல, இது இந்தியா...ஏற்கனவே இருக்க அரசியல்வாதிகள் மாறி அதிகமா பேசி டைம் வேஸ்ட் பண்ணப் போறதில்லை அரசியல்வாதிகளை பற்றியும் அதிகமாக பேச போறது இல்லை. இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிய பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்லை.. அதுக்காக கண்ண மூடிட்டு இருக்கவும் மாட்டோம்.
சோறு சாப்பிட்டா தான் பசியாறும், சோறுனு சொன்னா பசியாறாது. நம் எதிரிகள் நமது கொள்கைகளை பார்த்துவிட்டு அவர்களாகவே நம் முன்பாக வந்து நம்மை எதிர்ப்பார்கள். நாம்தான் உரத்த குரலில் நமது கொள்கைகளை பேச வேண்டும். பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெகவின் எதிரி" நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும்.
பக்கா பிளானோடு வந்து இருக்கோம் ப்ரோ.. ஒரு முடிவோட தான் வந்துருக்கேன் ப்ரோ..வெறுப்பு அரசியலை கையில் எடுக்கமாட்டோம்- நெருப்பாய் இருப்போம். முடிவோடுதான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.. பின்வாங்கவே மாட்டோம் என்று நடிகர் விஜய் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications