தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்.. சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு? ரேஸில் இருக்கும் 2 அதிகாரிகள்!
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் நடந்து வரும் சூழலில், சங்கர் ஜிவாலே தேர்தல் வரை டிஜிபியாக தொடர வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலைநாட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி. தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்த பொறுப்பில் சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட திமுக ஆட்சி அமைத்தது முதல் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் இருக்கிறார். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதன் காரணமாக அடுத்த டிஜிபியை தேர்வு செய்யத் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. டிஜிபி-யாக ஒருவர் தேர்வு செய்யப்பட 30 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும்.அதேபோல் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது மத்திய அரசின் பணிகளில் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் டிஜிபியாக தேர்வு செய்யும் நபர் மீது சிபிஐ மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது.
இந்த 3 விதிகளின் அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 8 ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக உள்துறை தேர்வு செய்து யுபிஎஸ்சி கமிட்டிக்கு அனுப்பும். அதில் இருந்து 3 பேரைத் தேர்வு செய்து தமிழ்நாட்டு அரசுக்கு யுபிஎஸ்சி கமிட்டி பரிந்துரைக்கும். இறுதியாக அந்த 3 பேரில் இருந்து முதல்வர் பரிந்துரையின் அடிப்படையில் டிஜிபி நியமனம் செய்யப்படுவார்.
அதன்படி அடுத்த டிஜிபி ரேஸில் சந்தீப்ராய் ராத்தோர், சீமா அகர்வால், அபே குமார் சிங், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் குமார் வான்கடே, ராஜீவ் குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்தீப் ராய் ராத்தோர் ஏற்கனவே போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல் சீமா அகர்வாலும் ரேஸில் முந்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய டிஜிபி தொடர்பாக இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், டிஜிபியாக சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கலாமா என்று ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தங்கள் மீது கட்சி சாயம் பூசப்பட வாய்ப்பு உள்ளது என்று அடுத்த டிஜிபி ரேஸில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications