அதிமுகவின் அடுத்த வாரிசு யார்? வேலுமணி தந்த ஷாக்கால் எடப்பாடி அதிரடி.. உறைந்த ரத்தத்தின் ரத்தங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை அ.தி.மு.க..வில் கடந்த ஒரு மாத காலமாகவே, நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் வெடித்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிரடி பேட்டி ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியைத் தக்க வைக்கப் போராடி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த மோதல்கள் அ.தி.மு.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இனி எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுகள் செல்லாது என சீனியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அ.தி.மு.க தலைமை அலுவலக வட்டாரமே தற்போது ரணகளமாக மாறிப் போயுள்ளது..

அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு உட்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது.. அ.தி.மு.க..வில் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பொதுச்செயலாளர் பழனிசாமி தொடர்ந்து நீக்கி வருகிறார்.. புதியவர்களை அந்த பதவிகளில் நியமித்தும் வருகிறார்.. இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தற்போது கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களே எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்..

ADMK Crisis Edappadi Palaniswami SP Velumani Natham Viswanathan Tamil Nadu Politics

எஸ்பி வேலுமணி காரசார பேட்டி

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து காரசாரமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.. அதில், கட்சியில் கருத்து வேறுபாடு நிலவினால் யாரையும் பொதுச்செயலாளர் நீக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

மேலும் பேசிய எஸ்.பி.வேலுமணி, கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் விரிசல் ஏற்பட்டால், அந்த தேதியிலிருந்து நிர்வாகிகள் யாரையும் நீக்கவோ அல்லது புதியவர்களை நியமிக்கவோ முடியாது என்பதுதான் கட்சி விதி.. கடந்த 11ம் தேதி அ.தி.மு.க..வில் யார் நிர்வாகிகளாக இருந்தார்களோ, அவர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்கள்..

எடப்பாடி பழனிசாமிக்கு பிறகு யார்

அதற்குப் பின் யாரை நீக்கினாலும், புதியவர்களை நியமித்தாலும் அது சட்டப்படி செல்லாது.. இனி பொதுச்செயலாளர் பழனிசாமி எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது; அப்படி எடுத்தாலும் அது செல்லாது என்று வேலுமணி எச்சரித்துள்ளார்..

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் தேவையற்ற நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி உடனடியாக கைவிட வேண்டும்.. பொதுக்குழுவைக் கூட்டி கட்சியைப் பலப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.. ஆனால், அவர் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.. நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்த்து, ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர பாடுபட வேண்டும்.. பழனிசாமியால் நீக்கப்பட்ட அனைவரும் அப்படியே பதவியில் தொடர்வார்கள் என்று எஸ்.பி.வேலுமணி அதிரடியாக பேசியுள்ளார்..

நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்

இதேபோல் மற்றொரு முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.. கட்சி நிர்வாகிகளை நீக்குவது பழனிசாமிக்கு பழக்க தோஷமாகி விட்டது என்று அவர் சாடியுள்ளார்..

எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 40க்கும் அதிகமானோர் வேறு கட்சிகளில் சேர்ந்து இப்போது எம்.எல்.ஏ..க்களாகி உள்ளார்கள்.. எடப்பாடி பழனிசாமி போகிற போக்கைப் பார்த்தால், கடைசியில் தன்னைத் தானே கட்சியிலிருந்து நீக்கினாலும் நீக்கி விடுவார் என்று நத்தம் விஸ்வநாதன் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.. முன்னாள் அமைச்சர்களின் இந்த அடுத்தடுத்த பேட்டிகள் அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதற்கு எடப்பாடி தரப்பு என்ன சொல்லுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+