ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! உறவினரே பகையாளியான கதை! கைதானவர் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரதீப் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில் அவர் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல கொலையாளிகளுக்கு எப்படியெல்லாம் திட்டம் தீட்டி கொடுத்தார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
தமிழக பகுஜ் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவருடைய வீடு இருக்கும் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் கொல்லப்பட்டார். அவர் கட்டி வரும் புதிய வீட்டை ஆய்வு செய்ய வந்த போது இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்தது.

ஆம்ஸ்ட்ராங்கின் தலை, கணுக்கால்களில் வெட்டினால் ரத்தம் அதிகம் வெளியேறி அவரால் தப்பிக்க முடியாது என்பதற்காக ரவுடிகள் அவரை ரத்த நாளங்கள் இருக்கும் நரம்புகளில் வெட்டினர். இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பட்டினம்பாக்கத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கருதியதால் இந்த கொலைக்கு பழிக்கு பழித்தீர்க்க திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 5 வழக்கறிஞர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் வெட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் மிகவும் கொடூரமான முறையில் ஏதோ இறைச்சியை வெட்டுவது போல் சதக் சதக் என வெட்டிய காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 5 வழக்கறிஞர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா, சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சம்பவம் செந்தில் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த வழக்குத் தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினர் பிரதீப் (28) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையில் பிரதீப், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்டு கொலையாளிகளுக்கு உதவி செய்தது தெரியவந்தது. குற்றவாளிகளுக்கு உதவியது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் ஊர்க்காவல் படையில் சிறிது காலம் பணியாற்றியவர் என தெரிகிறது.
மேலும் அவர் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாராம். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒவ்வொரு நாளும் எங்கெங்கு செல்வார், அவரது அன்றாட நடவடிக்கைகள் என்ன என்பதை கடந்த ஒரு மாதமாக பிரதீப் நோட்டமிட்டு வந்துள்ளார்.
பிரதீப்பும், ஆம்ஸ்ட்ராங் இருக்கும் தெருவிலேயே வசிக்கிறாராம். தினமும் ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணிக்க கொலையாளிகள் பிரதீப்புக்கு செல்போன் வாங்கி கொடுத்தனராம். இதை வைத்துக் கொண்டு அவர் ஆம்ஸ்ட்ராங்கை ஒரு மாதமாக கண்காணித்து வந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்குடன் எப்போதும் 10 பேர் சுற்றியிருப்பார்களாம். ஆனால் மாலை வேளைகளில் இந்த எண்ணிக்கை குறைந்து காணப்படுமாம். இதை ஒரு மாதமாக கவனித்த பிரதீப், மாலை நேரம்தான் சரியான நேரம் என நேரம் குறித்துக் கொடுத்துள்ளார். இந்த விஷயங்களை எல்லாம் ரவுடி அருளுக்கும் இவர் போன் செய்து கூறயிருக்கிறார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications