சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலர் மாறியது.. பாஜக பரம்பரையில் ஒரு திராவிட புள்ளி.. ஜெர்க் ஆன திமுக.. யாருங்க இந்த ஏம்பலம் செல்வம்!

புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் யார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ், திமுக, அதிமுக, தமாகா என பல கட்சிகள் வகித்து வந்த சபாநாயகர் பதவியை முதல் முறையாக பாஜகவிலிருந்து வகிக்க வந்துள்ளார் ஏம்பலம் செல்வம்.. இது ஒரு புதிய சாதனையாகும்..!

பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ரங்கசாமி முதல்வராகி விட்டார்.. ஆனால், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை...

இதற்கு பிறகு என்ஆர் காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மோதல் வெடித்தது.. ஒருவரும் விட்டுக்கொடுக்கவில்லை.. அமைச்சரவையும் தயாராகவில்லை.. மக்களையும் கவனிக்கவில்லை.. தொற்றையும் குறைக்கவில்லை.

புதுச்சேரி சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் பதவியேற்றார்.. போட்டியின்றி தேர்வு! புதுச்சேரி சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் பதவியேற்றார்.. போட்டியின்றி தேர்வு!

பதவிகள்

பதவிகள்

பதவிகளை கேட்டு பாஜக பிடிவாதம் பிடித்து கொண்டும், அதற்கு மறுத்து ரங்கசாமி முரண்டுபிடித்து கொண்டும் இருந்தனர்.. கடைசியில் அமித்ஷாவே போனை போட்டு ரங்கசாமியிடம் பேசியதாக தகவல் வந்தது.. ஒருவழியாக இப்போது இந்த பிரச்சினைக்கு முடிவு வந்துள்ளது..

 சபாநாயகர்

சபாநாயகர்

அதாவது, சபாநாயகர், 2 அமைச்சர்கள் தருவதாக ரங்கசாமி ஒப்புக் கொண்டார்.. இதை பாஜகவும் ஒப்புக் கொண்டது.. இதையடுத்து யாரை சபாநாயகராக நியமிக்கலாம் என்று அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமானது.. இதன் முடிவில் ஏம்பலம் செல்வத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.... நேற்று முன்தினம் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஏம்பலம் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. அதை ரங்கசாமி முன்மொழிந்தார். பாஜக நமச்சிவாயம் வழிமொழிந்தார்... இன்று ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வானார்.

 யார் செல்வம்?

யார் செல்வம்?

ஒருபக்கம் ரங்கசாமி, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சி தலைவர் சிவாவும் சேர்ந்து ஏம்பலம் செல்வத்தை அழைத்து வந்து சபாநாயகர் சீட்டில் உட்கார வைத்தனர்.. யார் இந்த ஏம்பலம் செல்வம்? இவர்தான் சபாநாயகர் என்று பாஜக சொன்னதும், ரங்கசாமி எதற்காக மறுப்பு சொன்னார்? இப்போது ஏன் ஒப்புக் கொண்டார்? இவர் பின்னணி என்ன? என்பதுதான் மக்களிடம் ஆர்வமாக எழுந்து வரும் கேள்வி.

 பதவி வேண்டாம்

பதவி வேண்டாம்

சபாநாயகர் பதவிக்காக ஏம்பலம் செல்வம் பெயரை பாஜக சொன்னதுமே, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று செல்வம் தயக்கம் காட்டினாராம்.. அதற்கு பதிலாக, அமைச்சர் பதவி அல்லது கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதனால், நியமன எம்எல்ஏக்களில் ஒருவரான அசோக் பாபுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கலாம் என்று ஒரு பேச்சு கிளம்பியது.. உடனே மற்ற பாஜக எம்எல்ஏக்கள் கொந்தளித்துவிட்டனர்.. அதனால், சபாநாயகர் பதவியை யாருக்கு தருவது என்று ஒரு முடிவாகாமலேயே இருந்தது.

திமுக

திமுக

இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக என்ட்ரி தந்தது.. சபாநாயகர் பதவியை நோக்கி காய் நகர்த்த ஆரம்பித்தது.. உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ நேருவை சபாநாயகராக கொண்டுவரவும் ஒரு முயற்சி எடுத்ததாக தெரிகிறது.. இந்த விஷயம் முதல்வர் வரை வந்து, அது சம்பந்தமாக யோசனையும் நடந்ததாக தகவல்கள் கசிந்தன. ரங்கசாமி தன் பங்குக்கு "வேறு ஒரு பிளானை" வைத்திருந்தார்.. அதற்குள் ஏம்பலம் செல்வத்திடம் பாஜக பேசி சம்மதிக்க வைத்து விட்டது.

முதல்முறை

முதல்முறை

ஏம்பலம் செல்வம் புதிய வரலாறு படைத்துள்ளார். பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. ஏம்பலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் ஏம்பலம் செல்வம்... புதுச்சேரி பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருப்பவர்... முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளார்... எடுத்த எடுப்பிலேயே சபாநாயகர் பதவியையும் பிடித்து விட்டார்.

 சபாநாயகர்

சபாநாயகர்

இதுவரை காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ், திமுக, அதிமுக, தமாகா என பல கட்சிகள் சபாநாயகர் பதவியை வகித்துள்ள நிலையில் முதல் முறையாக பாஜகவிலிருந்து சபாநாயகராகியுள்ளார் செல்வம். அந்த வகையில் இது புதிய வரலாறு. பாஜகவிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முறை எம்எல்ஏக்கள் வரிசையிலும் செல்வம் ஏற்கனவே இடம் பிடித்துள்ள நிலையில் இது அவருக்கு 2வது சாதனையாகும்.

 அனந்தராமன்

அனந்தராமன்

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனந்தராமனை சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் செல்வம்... இப்போது சபாநாயகராக அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதில்தான் பாஜகவின் கெளரவமும் அடங்கியுள்ளது..!

English summary
Who is Puducherry Speaker BJP Embalam Selvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X