ஜெயலலிதாவை கவனிக்க வைத்த சிம்லா முத்துச்சோழன்! 30,000 வாக்கு வித்தியாசம்! மறக்க முடியாத ஆர்.கே.நகர்
சென்னை: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துசோழன் ஒரு காலத்தில் ஜெயலலிதாவையே கவனிக்க வைத்தவர். யார் இந்த சிம்லா முத்துச்சோழன் தெரியுமா?
பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த சிம்லா முத்துச்சோழன். இவர் இன்றைய தினம் அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் பேட்டி அளிக்கையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லை. நான் பலமுறை அவருக்கு ஞாபகப்படுத்த முயன்றும் பலனில்லை.
கருணாநிதி நூற்றாண்டு விழா: அண்மையில் கூட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நான் எடுத்த முயற்சிகளுக்கும் திமுக தலைமை தடை போட்டது. இவ்வாறு திமுகவில் எனது வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிமுகவில் சேர்வது என்ற முடிவை எடுத்தேன். திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
யார் இவர் : யார் இந்த சிம்லா முத்துச்சோழன் என்பதை பார்ப்போம். திமுகவின் துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண் பாண்டியனின் இரண்டாவது மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன் (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.

ஜெயலலிதா படித்த பள்ளி: இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி. ஆர்ச் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா புனித அந்தோணியார் என்ற படத்தை தயாரித்தவர். இதன் மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர். முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் சிம்லா படித்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர்.
கடந்த 20 ஆண்டுகளாக திமுகவில் சிம்லா பணியாற்றி வந்தார். முதலில் வடசென்னை மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்திருந்தார். அப்போது 2016 ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா களமிறக்கப்பட்டார்.
30 ஆயிரம் வாக்குகள்: அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். பொதுவாக ஜெயலலிதா போட்டியிடும் தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சிம்லா முத்துச்சோழன் களப்பணியாற்றியதால் அவர் 30 ஆயிரம் வாக்குகளில் மட்டுமே வென்றார்.
இதனால் தமிழகம் முழுவதும் சிம்லா அறியப்பட்டார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து வழக்கறிஞராக இருந்த மருது கணேஷுக்கு திமுக வாய்ப்பளித்தது. ஆனால் அந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையான டிடிவி தினகரனிடம் டெபாசிட்டை இழந்தார்.
சிம்லாவுக்கு ஏமாற்றம்: இதையடுத்து சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது. இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனால் ஆர்.கே.நகர் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒர வேளை ஆர் கே நகர் இடைத் தேர்தலில் சிம்லாவுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் நிச்சயம் வென்றிருப்பார் என்றே அப்பகுதியில் வசிக்கும் சிம்லாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?











Click it and Unblock the Notifications