குடும்ப அரசியல் ஓகே.. இது குடும்பத்துக்குள்ளேயே அரசியல்! பாமகவில் தீடீரென முளைத்த ஸ்ரீகாந்தி! யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் தரப்பு பொதுக் குழுவைக் கூட்டியது இதில் ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீகாந்தி, பேரன்கள் சுகுந்தன், முகுந்தன் ஆகியோர் பேசி இருந்தனர். அதில்ஸ்ரீகாந்தி தம்பி அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், ஸ்ரீகாந்தியின் பிண்ணனி என்ன? அவர் அரசியலுக்கு வந்தது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்..

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழுவை நடத்தியது ராமதாஸ் தரப்பு. இதில் அன்புமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலரும் பேசினர்.

குறிப்பாக ராமதாஸின் மகளும், அன்புமணியில் சகோதரியுமான ஸ்ரீகாந்தியின் பேச்சு பலரையும் கவனிக்க வைத்தது. தந்தை முன் தம்பியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார் ஸ்ரீகாந்தி. யார் இந்த ஸ்ரீ காந்தி? எப்படி இவர் அரசியலுக்கு வந்தார்? என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.

Ramadoss Srigandhi pmk

அடிப்படையில் மருத்துவரான ராமதாஸ், வன்னியர் சங்கத்தை ஆரம்பித்து அதற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார். இவரது மனைவியின் பெயர் சரஸ்வதி. ராமதாஸ் - சரஸ்வதி தம்பதிக்கு ஸ்ரீகாந்தி, அன்புமணி, கவிதா ஆகிய மூன்று குழந்தைகள். இதில் ஸ்ரீகாந்தி பரசுராமனை திருமணம் செய்து கொண்டார். அன்புமணி ராமதாஸ் சௌமியாவை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீ காந்திக்கு சுகுந்தன், பிரத்திவன், முகுந்தன் என மூன்று மகன்கள்.

அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி தம்பதியினருக்கு சம்யுக்தா, சஞ்சுத்ரா, சங்கமித்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் சம்யுக்தாவை தான் ஸ்ரீகாந்தியின் இரண்டாவது மகனான பிரத்தீவன் திருமணம் செய்திருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்சனை வருவதற்கு காரணமே இந்த குடும்ப செண்டிமெண்ட் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரீகாந்தியின் கடைசி மகனான முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அறிவித்தார் ராமதாஸ். அதனை மேடையிலேயே அன்புமணி எதிர்த்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகுதான் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்க தொடங்கியது.

இடையில் அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் இதையேயான மோதல் வெளிப்படையாக வெடிக்க தொடங்கிய நிலையில், ராமதாஸ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. செவிலியரான சுசிலாவை ராமதாஸ் திருமணம் செய்து கொண்டதும், அவரும் தைலாபுரத்தில் தான் இருக்கிறார் என்ற தகவலும் பாமகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணியின் பக்கம் இருப்பதால், ராமதாஸுக்கு ஒரு அரசியல் வாரிசு தேவைப்பட்டது. அப்போது களமிறக்கப்பட்டவர் தான் அவரது மகளான ஸ்ரீகாந்தி. கடைசி மகளான கவிதா அன்புமணி ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அரசியலில் தலை காட்டாத ஸ்ரீகாந்தி, கடந்த சில மாதங்களாக தான் பொதுவெளியில் தலைகாட்டி வருகிறார். குறிப்பாக தர்மபுரியில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பாமகவின் ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அவரை செயல் தலைவராக அறிவித்திருந்தார் ராமதாஸ். தற்போது பசுமை தாயகத்தின் தலைவராக ஸ்ரீகாந்தியை நியமிப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் அது செல்லாது என அன்புமணி ராமதாஸ் தரப்பு திட்டவட்டமாக கூறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+