Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல "நடிகை"யுடன் உல்லாசம்.. 1 கோடி ரூபாயாமே.. அதுவும் ஹைவேஸில்.. சிக்கிய நபர் பரபர வாக்குமூலம்

ஹைவேஸில் நகைகளை கொள்ளையடித்து நடிகைகளிடம் ஜாலியாக இருந்துள்ளார் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் ஒருவர் சம்பாதித்துள்ளார்.. அந்த பணத்தில் ஹோட்டலில் ரூம் போட்டு நடிகைகளுடன் ஜாலியாக இருந்துள்ளாராம்..!

சென்னை பூந்தமல்லி போலீசாருக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்தது.. நசரத்பேட்டை பகுதியில் ஒருவர் தன்னுடைய காதலியுடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.. அந்த காதலி மருத்துவக்கல்லூரி மாணவியாம்..

அப்போது, போலீஸ் என்று சொல்லி ஒருவர் வந்து அந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் நகைகளையும் அபகரித்து கொண்டாராம்.. அதுபோலவே, வெள்ளவேடு பகுதியில் காரில் பேசி கொண்டிருந்த இன்னொரு காதல் ஜோடியிடம் 6 பவுன் நகையை அதே நபர் பறித்து கொண்டு போய்விட்டாராம்..

 கேமராக்கள்

கேமராக்கள்

போலீஸ் என்று சொல்லியதுடன், நகைகளை பறித்தது, பூந்தமல்லி போலீசாரை அதிர செய்தது.. அத்துடன், காதல் ஜோடிகளை மட்டுமே குறி வைத்து, இந்த சம்பவம் நடந்ததால், இதுகுறித்த விசாரணையிலும் உடனடியாக ஈடுபட்டனர்.. இதற்காகவே, ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆராயப்பட்டன.. ஆனால், யாருமே அதில் சிக்கவில்லை.. இதனால் போலீசார் குழம்பி போனார்கள்.. காதல் ஜோடியை மட்டுமே வைத்து நகைபறிப்பு நடப்பதால், போலீசாரே, காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் கண்காணிப்பில் இறங்கினர்.

ஹைவேஸ்

ஹைவேஸ்

அப்போதுதான் எதிர்பார்த்தபடியே, அந்த நபர் அங்கு வந்தார்.. தன்னை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வேலையை காட்டினார்.. இதையடுத்து, அவரை சுற்றிவளைத்து கொண்ட போலீசார், விசாரணையை அந்த நபரிடம் மேற்கொண்டனர்... அவர் பெயர் சிவராமன்.. 38 வயதாகிறதாம்.. இவருக்கு முக்கிய தொழிலே, அடுத்தவர் நகையை ஆட்டைய போடுவதுதானாம்.. அதிலும், ஹைவேஸ்களில் காரில் உட்கார்ந்திருக்கும் காதல் ஜோடிகளை மட்டுமே குறி வைத்து வேட்டையை நடத்துவாராம்.. போலீஸ் என்று சொன்னதும், பயந்துபோன ஜோடிகளும் தங்களிடம் உள்ள நகை, பணத்தை உடனே சிவராமனிடம் தந்துவிடுவார்களாம்..

உல்லாசம்

உல்லாசம்

இந்த நகைகளை அடகு கடையில் கொண்டுபோய், சிவராமன் விற்றுவிடுவாராம்.. அந்த பணத்தில் பெண்களிடம் ஜாலியாக இருப்பாராம்.. அதிலும் நடிகைகளிடம்தான் அதிக பணத்தை கொட்டி, உல்லாசம் அனுபவிப்பார் என்றும், இவரிடம் சிக்கிய துணை நடிகைகள் ஏராளம் என்றும் சொல்கிறார்கள்.. இவரை பிடித்து விசாரிக்கும்போதுதான், இவர் ஒரு பழைய குற்றவாளி என்பதும், இவர் மீது செங்கல்பட்டு, தாம்பரம், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற 45 கேஸ்கள் இருப்பது உறுதியானது.

நடிகைகள்

நடிகைகள்

இதற்கு பிறகு சிவராமன் வாக்குமூலம் தந்தார்.. அதில், "விருதாச்சலம் தாலுகா சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவன் நான்... கடந்த 8 வருடங்களாகவே செயின் பறிப்பு மற்றும் போலீஸ் என்று கூறி காதல் ஜோடிகளை குறிவைத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்தேன்.. அந்த வகையில் எனக்கு ஒவ்வொரு நாளும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கிடைக்கும். கடந்த மாதம் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

வழிப்பறி

வழிப்பறி


கடந்த 8ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தேன். ஐடி ஊழியர்கள் மற்றும் பூந்தமல்லி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் தங்களது காதலியுடன் ஹைவேஸ் சர்வீஸ் சாலைகளில் நின்று வெகு நேரம் பேசுவதால் அந்த இடத்தை தேர்வு செய்தேன்... போலீசாரின் திட்டத்தில் சிக்கினேன்.இதுவரை திருட்டு, செயின் பறிப்பு மற்றும் போலீஸ் என மிரட்டி வழிப்பறி செய்த வகையில் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளேன்.... அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளையடித்து உள்ளேன்.

 ஹோட்டல் நடிகைகள்

ஹோட்டல் நடிகைகள்

காதல் ஜோடிகள் புகார் அளிக்காததால் இது எனக்கு சாதகமாக இருந்தது... என்னால் பாதிக்கப்பட்டு புகார் அளித்தவர்கள் வகையில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 45 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால்.. புகார் அளிக்காமல் சென்ற காதல் ஜோடிகளால் 50க்கும் மேற்பட்ட வழக்கில் இருந்து நான் தப்பித்து வந்துள்ளேன்... எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் பல லட்சம் செலவு செய்து ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் எடுத்து, பாலியல் புரோக்கர்கள் மூலம் டிவி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பேன்.

 ஹேப்பி நடிகைகள்

ஹேப்பி நடிகைகள்

நான் இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்துள்ளேன். பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்துள்ளேன்... எனக்கு பிடித்த மாதிரி நடப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் பணத்திற்கு மேல் ரூ.10 ஆயிரம் அள்ளி கொடுப்பேன். அதிகளவில் 4 எழுத்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளினி க்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளேன்.

 சீரியல் நடிகைகள்

சீரியல் நடிகைகள்

நான் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் என்னை பார்க்க மாட்டார்கள். ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்... நடிகைகளுடன் ஒன்றாக இருப்பதற்காகவே தொடர் வழிப்பறியில் தனி நபராக எந்த கூட்டும் இல்லாமல் செய்து வந்தேன். எனக்கு என்று எந்த பணத்தையும் வைத்திருக்கவில்லை. கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நடிகைகளுக்காகவே செலவு செய்து வந்தேன்" என்றார் சிவராமன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+