சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த விக்கெட்?.. யார் அந்த "மாஜி".. போனை போட்டு ஸ்டாலினை புகழ்ந்து.. போட்டுடைத்த அன்பில் மகேஷ்

அன்பில்மகேஷ் முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தொலைபேசியில் பேசுகையில் தமிழக அரசையும் முதல்வரையும் பாராட்டுகிறார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக, தற்போது ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.. அந்த வகையில், சென்னை தேனாம்பேட்டையில் திமுக சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது...
இதில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய பேச்சுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது. அவர் பேசியதாவது:

கசியும் தகவல்கள்... கோட்டையில் எங்கு ஓட்டை... கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு கசியும் தகவல்கள்... கோட்டையில் எங்கு ஓட்டை... கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

 ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு

"இதே ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்துதான், தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய முதல் பணியை தொடங்கினார்.. அவரது சேவை நடைபெற முதல் விதை போட்ட இடமே இந்த ஆயிரம் விளக்குதான்.. எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான தேடி தேடி பார்த்தாலும், குறையே கண்டுபிடிக்க முடியவில்லை.. காரணம், எல்லா தரப்புக்குமான சிறந்த ஆட்சியாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

 கருணாநிதி

கருணாநிதி

ஜுன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவானது, இனி அரசு விழாவாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு பெருமையான விஷயம்.. தேர்தலில், திமுக அறிவித்திருந்த 505 வாக்குறுதிகளில் 60 சதவீத வாக்குகள் நிறைவேற்றப்பட்டு விட்டது... மிச்சமுள்ளவை இந்த 5 வருடத்திற்குள் மொத்தமாக நிறைவேற்றி தரப்படும் என்று சட்டமன்றத்திலேயே முதல்வர் நம்பிக்கை தந்துள்ளார்..

 சிற்றுண்டி

சிற்றுண்டி

அதேபோல, ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 500 கோடியில் மேம்பாலம் தேனாம்பேட்டையில் அமைக்கப்பட உள்ளது... 120 கோடி ரூபாய் இலங்கை மக்களுக்கு தந்திருக்கிறார்.. காலை நேரத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. முதல்வரின் "முகவரி திட்டம்" மிக சிறப்பான ஒன்று.. இதன்மூலம் அமைச்சர்களாக இருக்கும் நாங்களே ஏதாவது தவறு செய்திருந்தால் கூட, நீங்கள் நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்கலாம்..

 சிங்கார சென்னை

சிங்கார சென்னை

சிங்கார சென்னை என்பது நம்முடைய முதல்வரின் கனவு திட்டம்.. எனவே, சென்னையில் 2.0 திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் அறிவித்து வருகிறார். முதியோர் ஓய்வு ஊதியம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது, எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரே, போனை போட்டு வியந்து பாராட்டும் அளவிற்கு தமிழக முதல்வர் செயல்படுகிறார்... சுருக்கமாக சொன்னால், திராவிட மாடல் ஆட்சி திறம்பட செயல்படுகிறது...

Recommended Video

    Secret Hint குடுத்த Anbil Mahesh | Nenjukkuu Needhi Audio Launch | Udhayanidhi Stalin
     போனை போட்டவர் யார்?

    போனை போட்டவர் யார்?

    அதனால்தான், ஸ்டாலினின் தேவை, தற்போது இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது... எனவே நாம் அனைவரும் சேர்ந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்" என்று அன்பில் மகேஷ் பெருமிதமாக பேசியிருந்தார்.. இந்த பேச்சு திமுகவினருக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், போனை போட்டு முதல்வரின் செயல்பாட்டை பாராட்டிய அந்த மாஜி யாராக இருக்கும்? அப்படி பாராட்ட வேறு ஏதாவது காரணம் இருக்குமோ? என்பதுதான் அதிமுக கூடாரத்தின் கேள்வியாக எழுந்திருக்கிறது.

    மாஜி அமைச்சர்?

    மாஜி அமைச்சர்?

    இதனிடையே, இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. திமுகவை பொறுத்தவரை தற்போது கொங்கு மண்டலத்தில்தான் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது.. குறிப்பாக, நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு, அந்த மண்டலத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியே தற்போது எழுந்துள்ளதாம்.. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக வலைவிரித்துள்ளதாம்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு பாஜகவும் முந்திக் கொண்டு, காய் நகர்த்தி வருகிறதாம்.. ஆனால், அந்த மாஜி, சசிகலாவை ஓபிஎஸ் ஆதரவாளர் என்றும் க்ளு கிடைத்துள்ளது.. எனினும் யாருக்கு சாதகமாக முடிவு அமையப் போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    who is that admk ex minister and minister anbil mahesh praises cm mk stalin அன்பில்மகேஷ் முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X